16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக இன்று பதவியேற்கிறார் அப்பாவு!

0
90

தமிழகத்தின் சட்டப்பேரவைத் தலைவராக திமுகவின் சட்டசபை உறுப்பினர் அப்பாவு இன்று பதவியேற்க இருக்கிறார். அதேபோல சட்டப்பேரவை துணை தலைவராக பிச்சாண்டி பொறுப்பேற்க இருக்கிறார்.

16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்றைய தினம் ஆரம்பமானது. சட்டசபை கூடிய உடன் புதிய சட்டசபை உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டார்கள் முதலமைச்சர் ஸ்டாலின் முதலில் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார், அவருக்கு தற்காலிக சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் பிச்சாண்டி பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்திருக்கிறார்.அமைச்சர்கள், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் மற்றும் இதர சட்டசபை உறுப்பினர்கள் வரிசையாக பதவி ஏற்றுக் கொண்டார்கள்.

இதற்கிடையில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பிற்கு இணங்கி தாராபுரம் சட்டசபை உறுப்பினர் அப்பாவு பேரவைத் தலைவர் தேர்வுக்கு மனுதாக்கல் செய்தார். அதேபோல பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு கீழ்பெண்ணாத்தூர் சட்டசபை உறுப்பினர் பிச்சாண்டி வேட்புமனு தாக்கல் செய்தார். இவர்கள் இருவரையும் எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யாத காரணத்தால், அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகி இருக்கிறார்கள்.

ஆகவே சபாநாயகர் இன்றையதினம் பதவியேற்கிறார் அவரை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், பேரவை தலைவர் இருக்கையில் அமர வைப்பார்கள் என்று தெரிகிறது.