இனிமே இவங்க எல்லாம் இன்ஸ்டாகிராம் யூஸ் பண்ண முடியாது! இன்ஸ்டாகிராம் வைத்த ஆப்பு!

0
66
  • தற்போதுள்ள காலகட்டத்தில் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாகி வருகிறார்கள். சமூக வலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம்,ட்விட்டர், உள்ளிட்ட வலைதள பக்கங்களில் பல்வேறு தகவல் வெளியிடப்படுகின்றன அதோடு பலரும் இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆனால் படிக்கும் வயதில் இது போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் அவர்களுடைய கவனம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளது. அதோடு அவருடைய கற்றல் திறன் வருவதற்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது.

ஆகவே 18 வயது நிரம்பாத சிறுவர்கள் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, புதிய அப்டேட் ஒன்றை அந்த நிறுவனம் கொண்டு வந்திருக்கிறது.

அதாவது இனி வரும் காலங்களில் தங்களுடைய முகத்தை ஸ்கேன் செய்து வயதை உறுதிப்படுத்த வேண்டும், இதற்காக சரியான வயதை கணிக்கும் பிரத்யேக ஸ்கேன் வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்பாடு செய்திருக்கிறது.

அதோடு செல்ஃபி புகைப்படம் மற்றும் வீடியோவை எடுத்து அனுப்ப வேண்டும், அதோடு 18 வயதை கடந்த 3 பேரை மியூச்சுவல் நண்பர்களாக தேர்வு செய்ய வேண்டும் என்று அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது அந்த நிறுவனம்.