மாற்றப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம்! உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

0
70
Curriculum for changing schools and colleges! Announcement by the Minister of Higher Education!
Curriculum for changing schools and colleges! Announcement by the Minister of Higher Education!

மாற்றப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளின் பாடத்திட்டம்! உயர் கல்வித் துறை அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

கொரோனா தொற்று காரணமாக பல நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது.தற்பொழுது தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக பாதி நாட்கள் ஆன்லைன் முறையிலேயே மாணவர்கள் நாட்களை கழித்தனர். இதனால் மாணவர்களின் படிப்பு மிகவும் பாதித்தது. தற்பொழுது  தான் பெரியவர்கள் முதல் சிறார்கள் வரை அனைவருக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அது செயல்பாட்டிற்கும் வந்துள்ளது. மூன்றாவது அலை கடந்த பிறகு மாணவர்கள் தற்போது தான் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக செல்கின்றனர்.

பள்ளி மாணவர்கள் பலர் ஆன்லைன் பாடங்கள் செல்போன் இல்லாத காரணத்தினால் பயில முடியாமல் இருந்தனர்.அவர்கள் அனைவரும் விரைவாக கற்க வேண்டும் என்பதற்காக வீடு தேடி கல்வி என்ற திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.இவ்வாறு இருக்கையில் பத்து பதினொன்று பன்னிரண்டாம் வகுப்பிற்கான பொது தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. பாடங்களை விரைவில் முடிக்கும்படியும் கல்வித் துறை அமைச்சகம் தொடர்ந்து கூறி வருகிறது. இன்று தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாடத்திட்டம் மாற்றுவது குறித்த கூட்டம் நடைபெற்றது. இவ்வாறு இருக்கையில் 25 ஆண்டுகளுக்கு பின்னாக தற்பொழுது அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. வளர்ந்து வரும் டெக்னாலஜி காலகட்டத்தில் மாணவர்கள் அதற்கு ஏற்ப வளர வேண்டும்.

அதனை கருத்தில் கொண்டும் தொழில்துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் தற்சமயத்தில் உருவாகிறது. அந்த வேலை வாய்ப்புகளைப் பெற அதற்கு ஏற்ப திறன்களை மாணவர்கள் பெற்றிருக்க வேண்டும். அதனால் மாணவர்கள் படிக்கும் போதே தொழில்துறை காண பயிற்சியை பற்றி அறிய வேண்டும். அதனால் தற்பொழுது பொறியியல் பாடத்திட்டத்தை மாற்ற உள்ளனர். அதேபோல பள்ளியில் மாணவர்கள் படிக்கும் பொழுதே தொழிற்சாலை தொழில் திறன் பற்றி பாடத் திட்டத்தினை கற்க வேண்டும் என்று இந்த கூட்டத்தில் பேசுகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.