மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு?

0
59

மீண்டும் வெளியாகிறதா ஊரடங்கு குறித்த அறிவிப்பு?

தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கு கொரோனா தொற்றின் பரவல் குறைந்ததையடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது. மேலும், கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கொரோனா பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த ஆண்டு இறுதி வரை கூட அது நீடிக்க வாய்ப்புள்ளது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருந்தது. எனவே ஊரடங்கு கட்டுபாடுகளை தளர்த்துவதில் உலக நாடுகள் அனைத்தும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தது.

தமிழகத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காகவே ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என பலரும் பேசி வருகின்றனர். மேலும் தேர்தல் முடிந்ததும் மீண்டும் கொரோனா கட்டுபாட்டு விதிமுறைகள் கடுமையாக்கப்படலாம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.

அரசு சார்ந்த வட்டாரங்கள் இதுகுறித்து கூறுகையில், தேர்தலுக்கு பிறகு, ஊரடங்கு விதிக்கப்படும் என்பது தவறான தகவல். ஒருவேளை தேர்தல் சமயத்தில் கூட்டம் கூடி, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதே தவிர, அதனால் ஊரடங்கு அமல்படுத்தும் அளவிற்கு நிலைமை இருக்காது என தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஒமைக்ரானின் புதிய உருமாற்றமான பிஏ.2 வைரஸ் தற்போது அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்து வருகிறது. இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மாநில அரசுகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.

அந்த கடிதத்தில், கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளிக்கலாம் அல்லது கூடுதல் கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. மத்திய அரசின் இந்த கூற்றுபடி, தளர்வுகளுக்குத்தான் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

author avatar
Parthipan K