கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்!

0
133

கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உடனே குணமாக! இந்த ஒரு கனி போதும்!

கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் மற்றும் மங்கலான பார்வையை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்திக் கொள்ளலாம் அதனை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம்.

தற்பொழுது உள்ள சூழலில் இளம் வயதில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் மங்கலான பார்வை பார்வைத் திறன் குறைதல் ஆகியவை ஏற்படுகிறது. இதனை எவ்வித செலவும் இன்றி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து சரி செய்து கொள்ளலாம். அதனை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

பொதுவாக நம் கண்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வைட்டமின்களான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி, விட்டமின் பி 12, விட்டமின் பி6 இதுதான் ஊட்டச்சத்துக்கள் நம் கண்களில் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது இவை அனைத்தும் நிறைந்த ஓர் உணவுப் பொருளான நெல்லிக்கனியில் உள்ளது.

நெல்லிக்கனியில் விட்டமின் ஏ, விட்டமின் சி அதிகபடியாக நிறைந்துள்ளது. கண் பார்வை திறன் மற்றும் அதிகப்படியான வெளிச்சம் ஆகியவற்றை பார்ப்பதற்கு விட்டமின் ஏ மிகவும் உதவுகிறது. கண்களில் உள்ள தசைகளை வலுப்படுத்துவதற்கும் உதவுகிறது. வைட்டமின் சி கண்களின் பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது.

எனவே தினசரி நாம் நெல்லிக்கனிகளை சாப்பிடுவது நம் கண்களுக்கு மிகவும் நல்லதாகும். நெல்லிக்கனிகளை ஜூஸ் செய்து குடித்து வருவதன் காரணமாக கண் குறை மற்றும் மங்கலான பார்வை ஆகியவை வராமல் தடுக்க உதவுகிறது. அதிகப்படியான உடல் சூடு ஆகியவற்றை குறைக்கும் மற்றும் உடலினை சீராக வைத்திருக்கும் தன்மையை கொண்டுள்ளது.

இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எடுத்துக் கொள்ளும் பொருளாகும் இதனை ஜூஸ் செய்து அல்லது பச்சையாகவும் சாப்பிடலாம். எனவே நெல்லிக்கனி நம் கண்களுக்கு நல்ல மருந்தாக அமையும்.

author avatar
Parthipan K