மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

0
303
#image_title

மூட்டுவலி பிரச்சினை குணமாக? இந்த ஒரு இலை இருந்தால் போதும்!

மூட்டு வலி என்பது தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றாக மாறி வருகிறது. ஏனெனில் மாறிவரும் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வது போன்ற காரணங்களினால் இந்த மூட்டுவலி பிரச்சினை ஏற்படுகிறது.

இந்த மூட்டு வலியானது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒன்றாக இருந்தது. ஆனால் தற்போது 20 வயது முதலே இந்த பிரச்சனை ஏற்படுகின்றது. மூட்டுவலியை எவ்வாறு குணம் செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். அதற்கு முதலில் எருக்கஞ்செடி இலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் பாத்திரத்தில் இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள பத்து இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். தண்ணீரின் கலர் மாறியவுடன் இலைகளை வடிகட்டி கொள்ள வேண்டும். அதனையடுத்து அதில் ஒரு துணியை நினைத்து வலி இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர முட்டியில் நீர் கோர்த்தல் முட்டி வலி கை கால் வலி போன்றவைகள் உடனே குணமாகும்.

author avatar
Parthipan K