புரட்டாசி மாதம் நிறைவு! இறைச்சி கடைகளில் அலைமோதும் கூட்டம்!

0
83

புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் இறைச்சி வாங்குவதற்காக கறி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால், பெரும்பாலானோர் விரதங்களை மேற்கொள்வார்கள். இதனால் அசைவ உணவுகளை முற்றிலும் தவிர்த்து விடுவார்கள். இதன் காரணமாக மற்ற நாட்களை காட்டிலும் புரட்டாசி மாதத்தில் மட்டும் பொதுவாகவே இறைச்சிகளின் விலை சற்று குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமையோடு புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் அசைவப் பிரியர்கள் நேற்றுமுதல் இறைச்சிகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி கடைகளில் அசைவப் பிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதற்கிடையே, கடந்த வாரம் வரை விற்கப்பட்ட இறைச்சிகளின் விலை இன்று இரு மடங்காக விற்கப்படுகிறது. இருப்பினும் அசைவப் பிரியர்கள் விலையைப் பற்றி சற்றும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு விருப்பமான இறைச்சிகளை வாங்கி செல்கின்றனர்.

இதனால் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையிலிருந்தே மீன் விற்பனை களைகட்டியுள்ளது. புரட்டாசி மாதம் நிறைவடைந்ததால் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வழக்கத்தை விட இன்று கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதனால் அங்கு பணியில் இருக்கும் மாநகராட்சி ஊழியர்கள், இறைச்சி வாங்க வரும் பொதுமக்களை முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.

author avatar
Parthipan K