புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவை வெளுத்து வாங்கிய மக்கள்

புல்வாமாவில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு படை வீரர்கள் 45 பேர் கொல்லப்பட்டதற்கு ஒரு சிலர் தான்  காரணம், அதற்காக பாகிஸ்தான் நாட்டையும், பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் குறை சொல்வது சரியா? என்று பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கேள்வியெழுப்பியிருந்தார்

ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு துணை ராணுவப்படையினர் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா நெடுஞ்சாலையில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை ஓட்டி வந்த பேருந்து மீது மோதி வெடிக்கச் செய்து நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 45 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர்.30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை வீரர்கள் காயமடைந்துள்ளார்கள்.

இந்த கொடூர தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து, இந்த தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் புல்வாமா தாக்குதல் குறித்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்த பேட்டியின் போது அவர் கூறியதாவது, ” புல்வாமாவில நமது ராணுவத்தினர் மீது தீவிரவாதி நடத்திய தாக்குதல் கோழைத்தனமானது. இந்த தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.வன்முறை என்பது கண்டிக்கத்தக்கது, அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள ஒரு தீவிரவாத குழு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார்கள். ஆனால், அந்த நாட்டை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலுக்காக ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாட்டையும், அந்த நாட்டு மக்களையும் நாம் குறை சொல்லலாமா? என்று சித்து கேள்வி எழுப்பினார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நட்புடன் பழகி வருபவர். சமீபத்தில் இம்ரான் கான் பிரதமராக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்குச் சென்று, பாகிஸ்தானின் ராணுவத் தளபதியை கட்டியணைத்து சித்து நட்பு பாராட்டியது பெரும் சர்ச்சைக்குரியதானது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் நாடே கொந்தளித்துள்ள இந்த புல்வாமா தற்கொலை படை தாக்குதல் குறித்து பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்துவுக்கு எதிராக அனைவரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைத்தளங்களில் இவரை எதிர்த்து பதிவு செய்த கருத்துக்கள் #BoycottSidhu என்ற ஹேஸ் டேக்கில் தேசிய அளவில் டிரண்டிங் ஆகி வருகிறது.

#BoycottSidhu

மேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | ஆன்லைன் தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் செய்திகள் | தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | ஆன்லைன் டிரண்டிங் செய்திகள் | வியாபார செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | உண்மையான செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | ஆன்லைன் தமிழ் செய்திகள் | அரசியல் செய்திகள் | மாநில நிகழ்வுகள் | தேசிய நிகழ்வுகள் | மருத்துவ செய்திகள் | சமையல் குறிப்புகள் | சுற்றுலா தகவல்கள் | வணிக தகவல்கள் | ஆன்லைன் வணிகம் | ஆன்லைன் வியாபாரம் | வெளிநாட்டு செய்திகள் | கிரிக்கெட் செய்திகள் | கால்பந்து செய்திகள் | திமுக செய்திகள் | அதிமுக செய்திகள் | பாமக செய்திகள் | தேமுதிக செய்திகள் | நாம் தமிழர் கட்சி செய்திகள் | மதிமுக செய்திகள்காங்கிரஸ் செய்திகள் | பாஜக செய்திகள் | அமமுக செய்திகள் | மக்கள் நீதி மய்யம் செய்திகள்  மற்றும் சினிமா செய்திகள்  போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முக