ஜிம்பாப்வே அணியை ஊதி தள்ளிய இந்தியா! அபார வெற்றி!

0
84

ஹராரேயில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது. இந்திய அணி 50 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்து 8 விக்கெட் இழந்தது இந்த நிலையில், ஜிம்பாப்வே அணி 276 ரன்கள் கடைசி ஓவர் வரையில் போராடி தோல்வியை சந்தித்தது.

ஜிம்பாப்வே அணியை சார்ந்த சிக்கந்தர் ரசா 95 பந்துகளை சந்தித்து 9 பௌண்டரி 3 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் எடுத்து தன்னுடைய சமீபத்திய6 ஒருநாள் போட்டிகளில் 3வது சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் 2 ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பந்தை தூக்கி அடித்தார். அங்கே சுப்மன் கில் முன்னால் வந்து கேட்ச் பிடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

முன்னதாகவே திணறிக் கொண்டிருந்த இந்திய அணியை தன்னுடைய 130 ரன்கள் மூலமாக வெற்றி ரன் இலக்காக மாற்றியதும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது அதோடு உண்மையான ஆட்டநாயகனும் அவர்தான்.

லோகேஷ் ராகுல் முதல் 2 போட்டிகளில் டாஸ் வென்று அவர்களை பேட்டிங் செய்ய அழைப்பு விடுத்தார். என்பது எதற்காக என இப்போது புரிகிறது. சேசிங் செய்வதில் அந்த அணி மிகவும் நன்றாக விளையாடுகிறது.

அந்த அணி சேசிங்கில் சான் வில்லியம் முதலில் 46 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். தீபக்சாகருக்கு அவேஷ் கானுக்கு அடி, அதிலும் குறிப்பாக தீபக்சாகர் 10 ஓவர்களில் 75 ரன்கள் 2 விக்கெட் என பெருத்த அடியாக வாங்கினார். ஆவேஷ் கான் 9.3 ஓவர்களில் 3 விக்கெட்டை கைப்பற்றினாலும் இவர் பந்துவீச்சில் நம்பகத்தன்மை இல்லை.

10 ஓவர் 55 முக்கிய விக்கட்டான அதுவும் சுப்மன் கில்லின் திகைப்பான கேட்சினால் கிடைத்த சிக்கந்தர் ரசா விக்கெட் நல்ல பந்துவீச்சு என்றால் சுழற் பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் 2 விக்கெட் அக்சர்ப்பட்டேல் 2 விக்கெட் இருவரும் 20 ஓவர்களில் 68 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அந்த அணி ஒரு கட்டத்தில் 27.2 ஓவர்களில் 122 ரன்களை எடுத்து 5 விக்கட்டை இழந்து தடுமாறி வந்தது.ரியான் வெளியேறிய போது 145 ரன்கள் 6 விக்கெட் இழந்திருந்த நிலையில், லூக் ஜாங்வி வெளியேறிய போது 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பிறகு ஆல் ரவுண்டர் இவான்ஸ் இவருடைய பந்து வீச்சிலும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இவரும் சிக்கந்தர் ரசாவும் ஒன்றிணைந்து 104 ரகளை சுமார் 73 பந்துகளை சந்தித்து சேர்த்து தான் இந்திய அணியின் வயிற்றில் புளியை கரைத்ததை போல ஆகிவிட்டது.

பிராட் இவான்ஸ் 28 ரன்களில் ஆவேஷ் கான் பந்துவீச்சில் எல் பி டபிள்யூ ஆனார். ஆனால் இதனை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே ரிவியூ தேர்ந்தெடுந்த நிலையில் ஜிம்பாப்வே அணியின் வெற்றிக்கு இது ஒரு ஆரம்ப புள்ளியாக இருந்திருக்கும். ஆனால் நடுவர் அவுட் கொடுத்து விட்டார், பேட்டர் ரிவியூ செய்தார். பந்து ஸ்டம்பை தாக்குவதை ரீப்ளே செய்ததில் தெளிவாக பார்க்க முடிந்தது.

சிக்கந்தர் ரசா 3 பவுண்டர்கள் ஒரு சிக்ஸர் உடன் 61 பந்துகளில் அரை சதம் கடந்தார். அதன் பிறகு 88 பந்துகளில் 8 பவுண்டரி 2 சிக்ஸர்களுடன் சதமடித்த அவர் இறுதியில் 95 பந்துகளில் 9 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 115 ரன்கள் எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.

சுப்மன் கில்லின் அபாரமான கேட்ச் இல்லையென்றால் இவர் சிம்பாவே அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்திருப்பார். இந்த இலக்கை விரட்டி இருந்தால் ஜிம்பாப்வே அணி இந்திய அணிக்கு எதிராக வெற்றிகரமாக துரத்திய மிகப்பெரிய இலக்கு இதுவாகத்தான் இருந்திருக்கும். ஆகவே தான் ஆட்ட நாயகன், தொடர் நாயகன், உள்ளிட்ட 2 பரிசுகளையும் சுப்மன் கில் தட்டிச் சென்றார்.