கிரெடிட் கார்டு கடன்களுக்கான இஎம்ஐக்கும் ரிசர்வ் வங்கி வழங்கிய அவகாசம் உண்டா?

0
80
Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium
Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium

கிரெடிட் கார்டு கடன்களுக்கான இஎம்ஐக்கும் ரிசர்வ் வங்கி வழங்கிய அவகாசம் உண்டா?

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த பாதிப்பானது மேலும் பரவி நாட்டு மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய,மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனையடுத்து கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் கட்டுப்படுத்த தற்போது நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

மக்கள் நலன் கருதி மத்திய அரசு பிறப்பித்த இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக பொது மக்கள், கூலித் தொழிலாளர்கள், தனியார் மற்றும் பொதுத்துறையை சேர்ந்த பெரும்பாலான ஊழியர்கள் என அனைவரும் தங்களது வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில் மத்திய அரசு பிறப்பித்த இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மற்றும் இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் மக்களுக்கு தொடர்ந்து பல்வேறு நிதி சலுகைகளை மற்றும் நிவாரண அறிவிப்புகளை வழங்கி வருகின்றன.

Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium
Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium

அந்த வகையில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ், கொரோனா வைரசால் ஏற்படும் பொருளாதார பின்னடைவை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. மேலும் அதன் ஒரு பகுதியாக எல்லா வகையான கடன்களின் தவணைகளுக்கு 3 மாதங்களுக்கு விலக்கு அளிக்க அனுமதிக்கப்படுகிறது என்றும் கூறியிருந்தார்.

மேலும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மக்களுக்கு தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பதில் இருந்து 3 மாதங்கள் வரை கால அவகாசம் வழங்கலாம். அதோடு, தவணை செலுத்த வங்கிகள் அளிக்கும் 3 மாத அவகாச காலத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சிபில் ஸ்கோரில் வங்கிகள் சேர்க்கக் கூடாது. மேலும் 3 மாதங்களுக்கு அவர்களுடைய EMI கடன் தவணை செலுத்தாமல் விடுவதால், அதனை வாராக்கடனாகவும் எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறியிருந்தார்.

மேலும் இது மட்டுமல்லாமல் வங்கி கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதமானது 5.15%ல் இருந்து 4.4% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டுக் கடன் மற்றும் வாகன கடன் உள்ளிட்ட பல கடன்களுக்கான வட்டி விகிதமும் குறைய வாய்ப்பு உள்ளது.

Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium
Credit Card Loan is Eligible or Not for 3 months EMI moratorium

இந்நிலையில் பொதுமக்களுக்கு EMI செலுத்துவதில் சலுகை அளித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்ததில் பல சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. அதில் குறிப்பாக இந்த சலுகை கிரெடிட் கார்டு கடன்கள் வாங்கியவர்களுக்கு பொருந்துமா? என்ற கேள்வி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

கிரெடிட் கார்டு கடன்கள் சுழலும் கடன் (revolving credit) என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், இதற்கு நிவாரணம் அளிக்கப்படமாட்டாது. மேலும் டெர்ம் லோன் என்ற பிரிவின் கீழ் கிரெடிட் கார்டு கடன்கள் வராது என்பதால் கிரெடிட் கார்டு கடன்களுக்கு தொடர்ந்து இஎம்ஐ செலுத்த வேண்டியிருக்கும். ரிசர்வ் வங்கி அளித்த சலுகை கிரெடிட் கார்டு கடன்கள் வாங்கியவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.