அவங்களுக்கு புத்தி சொல்ல இவர் தான் சரியான ஆளு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

0
78

சுமார் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ராஜஸ்தான் அரசின் தடை உத்தரவு அமைந்திருக்கிறது.

அந்த தடையை நீக்குவதற்கு தமிழக அரசு இந்த பிரச்சனையில் தலையிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், வலியுறுத்தி இருக்கின்றார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல சிறு தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.

அதற்கு பட்டாசு தயாரிக்கும் தொழிலும் விதிவிலக்கு இல்லை.

ஊரடங்கு காரணமாக பட்டாசுகளின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது .

இதன் காரணமாக பல தொழிலாளர்கள் வேலை இழந்து கடனாளியாக மாறி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஊரடங்கில் ஓரளவிற்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு சென்ற இரு மாதங்களாகவே பட்டாசு உற்பத்தி நடைபெற்று வருகின்றது.

உற்பத்தி செய்த பட்டாசுகள் அனைத்தையும் விற்பதற்கு தயாராக வைத்திருக்கும் நிலையில், திடீரென்று ராஜஸ்தான் அரசு இந்த வருடம் பட்டாசுகளை வெடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும். தடை விதித்து இருக்கின்றது.

இந்த செயல் விருதுநகர் பட்டாசு தொழிற்சாலைகளையும், அதை நம்பி இருக்கும் தொழிலாளர்களையும், பெரிய அளவில் பாதிக்கும்.

அதோடு ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டாசு வெடிப்பதின் காரணமாக, காற்று மாசு ஏற்பட வாய்ப்பிருக்கிறது நோயாளிகளுக்கு கூடுதலான பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதனால். பட்டாசுகளை வெடிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

விருதுநகரில் ஒட்டுமொத்த பொருளாதாரமே பட்டாசு தொழிற்சாலையை நம்பியே இருக்கின்றது.

பல்லாயிரக்கணக்கான பட்டாசு கடை களும், அதனை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான வணிகப் பெருமக்கள், அதில் வேலைப்பார்க்கும் பல லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் வாழ்க்கை பட்டாசு தொழிலோடு ஒன்றிணைந்து இருக்கின்றது.

இந்தியாவுடைய ஒட்டுமொத்த தேவையில் சுமார் 95% பட்டாசு உற்பத்தி விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றி தான் நடந்து வருகின்றது.

எனவே இதுபோன்ற மக்களின் வாழ்வாதாரத்தையும் சமூக பொருளாதார நிலையும் கணக்கில் வைத்து ராஜஸ்தான் அரசு இந்த தடையை உடனடியாக நீக்க வேண்டும், என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டிருக்கின்றது.

மேலும் உத்தரபிரதேசம் அரியானா டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகளுடனும், மத்திய அரசுடனும், கலந்தாலோசித்து இந்த தடையை நீக்குவதற்கான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசை அந்த கட்சி கேட்டுக் கொண்டிருக்கின்றது.