இரவில் பசு மாடுகள் மாயம்:? பின்னர் தெரிய வந்த காரணம்?

0
77

 

புதுச்சேரியிலுள்ள சாரம் என்ற பகுதியில் தொடர்ந்து பசு மாடுகள் மற்றும் கன்றுகள் மர்மமான முறையில் காணாமல் போனதால் அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் 10க்கும் மேற்ப்பட்ட கறவை மாடுகளை வீட்டில் வளர்த்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் தன் வீட்டின் முன் பகுதியில் ஒரிரு மாடுகளை கட்டிவைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 17 ஆம் தேதி இவரது கறவைமாடு ஒன்று காணாமல் போனதை அடுத்து பின் அடுத்த இரண்டு நாட்களில் மீண்டும் ஒரு கன்று குட்டி காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராஜ் அங்கு பொறுத்தபட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்துள்ளார்.

 

அதில் பதிவு ஆன காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் மாடு மற்றும் கன்றை இழுத்து செல்லும் காட்சிகள் பதிவு ஆகியுள்ளதை கண்டார்.

 

பதிவான காட்சிகளின் பெயரில் தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

யுவராஜ் கொடுத்த புகார் அடிப்படையில் மற்றும் சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளையும் கொண்டு போலீசார் திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

author avatar
Kowsalya