யார வேணாலும் மாட்டு சாணியால அடிங்க! யாரும் கேட்க மாட்டாங்க! விநோத திருவிழா…!

0
123
Andhra cow dung festival
Andhra cow dung festival

யார வேணாலும் மாட்டு சாணியால அடிங்க! யாரும் கேட்க மாட்டாங்க! விநோத திருவிழா…!

மாட்டு சாணியால் அடிப்பது, ஒருவரை இழிவுப் படுத்துவதற்காக நடக்கும் பொதுவான செயலாகும். இதனை பெரும்பாலும் திரைப்படங்களில் காட்டுவதை நாம் பார்க்கலாம்.

ஆனால், மாட்டு சாணியால் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம், அதற்கு எந்த தடையும் தேவையில்லை என்ற விநோத திருவிழா ஆந்திராவில் நடைபெற்றது.

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கைரூப்பாலா என்ற கிராமத்தில் நடந்த திருவிழாவில், மாட்டு சாணியை கூட்டம் கூட்டமாக திரண்டு ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து தாக்கிக்கொண்டனர்.

இதில், யார் யார் மீது சாணியை வீசினாலும், மற்றவர்கள் எதுவும் கேட்காமல் அவர்களும் வீசியெறிந்து கொண்டாடினர்.

இப்படி ஒரு விநோத நிகழ்ச்சி உகாதி திருநாளுக்கு அடுத்த நாள் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவாக நடத்தப்பட்டு கொண்டாடி வருகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், தற்போது கொரோனா தொற்று பரவி வருவதால், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் சூழலில், இப்படிப்பட்ட திருவிழாக்கள் மேலும் தொற்றை பரப்புவதாகவே அமையும் நிலை ஏற்பட்டுள்ளது.