தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் விடுத்த கடுமையான எச்சரிக்கை!

0
58

தமிழ்நாட்டில் நோய் தொற்று தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது இந்த சூழ்நிலையில், உருமாறிய நோய் தொற்றாக கருதப்படும் ஓமிக்ரான் நோய்தொற்று இந்தியாவிற்குள் நுழைந்ததன் காரணமாக, அந்த நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

முதல் தவணை தடுப்பூசி போட்டு இருப்பவர்கள் கட்டாயமாக இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

மதுரை மாநகராட்சி பகுதியில் வசித்து வருபவர்களில் இதுவரையில் தடுப்பூசி போடாதவர்கள் மாவட்ட நிர்வாகம் சார்பாக ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குள் அவர்கள் குறைந்த பட்சம் ஒரு தவணை தடுப்பூசியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

அவகாச நேரம் முடிந்த பிறகும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.