உலகமே எதிர்பார்த்த மகிழ்ச்சியான அறிவிப்பை சற்று முன் வெளியிட்ட ரஷ்ய அதிபர்

0
80
Vladimir Putin-News4 Tamil Online Tamil News
Vladimir Putin-News4 Tamil Online Tamil News

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளையெல்லாம் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ள சூழலில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் கடுமையாக போராடி வருகின்றன. பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்களும் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசி மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போதைய சூழலில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளும் போட்டி போட்டு சோதனைகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவின் கமலேயா நிறுவனம் உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் பரிசோதனைகள் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரசுக்கு எதிரான உலகமே எதிர்பார்க்கும் இந்த தடுப்பூசியை முறைப்படி பதிவு செய்வதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இது குறித்து சமீபத்தில் ரஷ்ய சுகாதாரத் துறை அமைச்சர் முரஸ்கோ உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்து ஆகஸ்ட் 12ம் தேதி பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிபர் விளாடிமிர் புதின் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் உலகிலேயே முதன்முறையாக கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்து பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கண்டுபிடித்த புதிய தடுப்பூசி தனது மகள் உள்ளிட்டோருக்கும் செலுத்தி முறையான பரிசோதனை செய்துள்ளதாகவும் அதிபர் விளாடிமிர் புதின் இது குறித்து தெரிவித்துள்ளார்.