கொரோனாவிற்கு சாவுமணி அடிக்கும் தமிழகம்!

0
64

நாட்டில் அவ்வப்போது நோய் தொற்று பாதிப்பு ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. இருந்தாலும் சிறியதாய் ஒரு ஆறுதல் என்னவென்றால் தினசரி நோய் தொற்று பாதிப்பு 10 ஆயிரத்திற்கும் கீழ் இருக்கிறது .

அதனடிப்படையில் நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5784 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7 ஆயிரத்து 995 பேர் குணமடைந்து இருக்கின்ற சூழ்நிலையில், 252 பேர் நோய் தொற்று பாதிப்பு பலியாகியிருக்கிறார்கள். நாட்டில் இதுவரையில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 3 ஆயிரத்து 644 ஆக அதிகரித்திருக்கிறது.

நாடு முழுவதும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 ,993 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில், நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து இதுவரையில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 41 லட்சத்து 38 ஆயிரத்து 763 ஆக அதிகரித்திருக்கிறது. நோய் தொற்று பாதிப்பு காரணமக ,இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 75 ஆயிரத்து 888 ஆக அதிகமாகியிருக்கிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 66 லட்சத்து 98 ஆயிரத்து 607 பேர் நோய்தொற்று தடுப்பூசிகள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் இதுவரையில் 133 கோடியே 88 லட்சத்து 12 ஆயிரத்து 572 கோடி தடுப்பூசி தவணைகள் செலுத்தப்பட்டிருக்கின்றன. நாடு முழுவதும் நோய்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் விகிதம் 98.37 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது. இறந்தவர்களின் சதவீதம் 1.37 சதவீதமாக குறைந்திருக்கிறது. சிகிச்சைபெற்று வருவோரின் சதவீதம் 0.26 சதவீதமாக குறைந்திருக்கிறது.