கொரோனாவையே மிஞ்சும் புதிய வைரஸ்! அலரும் உலக நாடுகள்!

0
106

கொரோனா தொற்று நோய் பரவல் மட்டுமல்லாமல் எந்த ஒரு வைரஸ் தொற்றும் உருமாறுவது இயல்புதான் அதற்காக இப்படியா என்று உலக அளவில் மருத்துவ விஞ்ஞானிகளை அலற வைத்திருக்கிறது புதிதாக தோன்றி இருக்கக்கூடிய உருமாறிய வைரஸ் ஒன்று, அதோடு மட்டுமல்லாமல் உலக நாடுகளின் பங்குச் சந்தைகளை எல்லாம் ஒரே நாளில் சரிவை சந்திக்க வைத்திருக்கிறது இந்த புதிய நோய்தொற்று இந்த வைரஸ்க்கு பி.1.1.529 என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இந்த நோய்த்தொற்றின் பிறப்பிடம் தென் ஆப்பிரிக்கா என்று சொல்லப்படுகிறது, அங்குதான் இந்த வைரஸ் தொற்று முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அடுத்து ஹாங்காங் போட்ஸ்வானா, இஸ்ரேல், உள்ளிட்ட நாடுகளிலும் இந்த நோய்த்தொற்று கால்பதித்து இருக்கிறது. இதுவரை இந்த நோய் தொற்று 60 பேருக்கு பரவியிருக்கிறது.

இதுவரையில் உலகம் முழுவதும் கண்டறியப்பட்டு இருக்கின்ற கோவிட தொற்றுகளில் இதுதான் மிக மோசமானது என்று தெரிவிக்கிறார்கள் விஞ்ஞானிகள். நோய் எதிர்ப்பு சக்தியை தடுக்கும் தன்மையை இந்த வைரஸ் கொண்டிருப்பதுதான் மருத்துவ அறிவியல் சமூகத்தை கவலை இருக்கிறது என சொல்கிறார்கள்.

இதுவரையில் இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் பெரிய அளவில் வேலை செய்து விடாது என்று எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள் நிச்சயமாக குறைவான செயல் திறனையே கொண்டிருக்கும் என்று எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியர் ஜேம்ஸ் நைஸ்மித், இது அதிவேகமாகப் பரவும் எனவும் அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.

இது நம்ப முடியாத அளவுக்கு உருமாறி இருக்கிறது அசாதாரணமான திரழிகளின் மண்டலமே இருக்கிறது இது தற்சமயம் பரவி வந்திருக்கின்ற வைரஸ் வகைகளிலிருந்து மிகவும் வித்தியாசமானது என கூறுகிறார் தென்னாப்பிரிக்காவின் தொற்று நோய் வலிப்பு மற்றும் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் துலியோ டி ஒலிவேரா. இந்தத் திரிபு எங்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது இது பரிமாண வளர்ச்சியில் மிகப் பெரிய பாய்ச்சலை கண்டிருக்கிறது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக எண்ணிக்கையிலான பிரிவுகளை கொண்டிருக்கிறது என்று வியந்திருக்கிறார் அந்த நபர்.

இந்த உருமாறிய சோற்றில் 50 மரபணு பிறழ்வுகள் இருக்கின்றனவாம் வைரஸின் ஸ்பைக் புரதத்தின் இடையே மட்டுமே 30க்கும் அதிகமான பிரிவுகள் இருக்கின்றனவாம் பொதுவாக தடுப்பூசிகள் இந்த வைக்கிறது. இவைகளை தான் குறிவைக்கின்றன. மனித உடலுக்குள் ஊடுருவ கொரோனா தொற்று இந்த புரத இழையைத் தான் பயன்படுத்துகின்றன.

காகிதத்தில் பயங்கரமாக தோன்றி உருமாறிய தொற்றுக்கள் ஏராளமாக இருக்கின்ற பீட்டா வைரஸ் அப்படிப்பட்ட ஒன்றாக பொதுமக்களை கவலையில் ஆழ்த்தியது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இருந்து தப்பிப்பது இது மிகச் சிறந்தது. ஆனால் இதையெல்லாம் கடந்து எதார்த்தத்தின் அதிவேகமாக பரவி கொரோனா வைரஸ் தான் உலகை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த புதிய தோற்று அதிவேகமாக இந்த அளவுக்கு பரவும் கொடூரமானதாக தடுப்பூசிகள் கண்டுபிடித்தது பலன் கிடைக்குமா என்பது எல்லாம் ஆய்வக ஆய்வுகள்தான் தெரிவிக்கும் அதற்காக நாம் அனைவரும் பொறுத்திருக்க வேண்டும்.

இந்தத் தொற்று முதலில் விழித்துக் கொண்டிருக்கின்ற நாடு இங்கிலாந்து என்று சொல்லவேண்டும், இங்கிலாந்து சுகாதார முகமையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் இதுவரை நாம் பார்த்ததில் கவலை அளிக்கின்ற தொற்று இதுதான் இந்த தொற்று முதன்முதலாக கண்டறியப்பட்டுள்ள தென் ஆப்பிரிக்காவின் கிடங்கில் ஆர் வேல்யூ என்று சொல்லப்படுகின்ற இதன் பரவல் விகிதம் இரண்டாக இருக்கிறது. இது உண்மையிலேயே மிகவும் அதிகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதனால் இங்கிலாந்தில் தற்சமயம் வாரத்திற்கு 50ஆயிரம் பரவன் மரபணு வரிசைப்படுத்தி சோதிக்கிறார்கள். இது அதிகபட்ச எண்ணிக்கை என்பதுவும் டாக்டர் சூசன் ஹாப்கின்ஸ் தெரிவிக்கும் தகவலாகும். இந்த வைரஸ் பரவல் உள்ளிட்டவற்றை தடுப்பதற்காக தென்ஆப்பிரிக்கா, நமீபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா உள்ளிட்ட 6 நாடுகளில் விமானங்களை இங்கிலாந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது.