கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனை! பொது மக்களுக்கு நற்செய்தி!

0
81

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும் அதிலிருந்து முற்றிலும் மக்களை பாதுகாக்கவும் கோவாக்சின் எனும் தடுப்பு ஊசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் எனும் நிறுவனத்தின் சார்பில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்தாகும். இந்த நிறுவனத்தில் முற்றிலும் பாதுகாப்பான முறையில்    இம்மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், பஞ்சாப் மற்றும்  பீகார் போன்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனம் இம்மருந்தை பயன்படுத்த அனுமதி கேட்டுள்ளது. இந்தியாவின் 12 மாநிலங்களில் சுமார் 375 பேர் மீது இரண்டாம் கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மருந்து கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உள்பட அனைத்து இடங்களிலும் இந்த நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கு சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் நபர்கள் வரை இதில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று  கூறப்படுகிறது.

கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட பரிசோதனை தற்போது முதல் சுற்றில் வெற்றி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இது இம்மாத இறுதிக்குள் இந்த இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவடைந்துவிடும். மூன்றாம் கட்ட பரிசோதனை அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. பாரத் பயோடெக் நிறுவனம் பிற நாடுகளில் உள்ள மருத்துவ நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்து அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K