சேலத்தில் உயிருக்கு பயந்து காவல் நிலையத்தில் தஞ்சம் புகும் 2 காதல் ஜோடிகள்!

0
65

சேலம் அஸ்தம்பட்டி உடையார் காலனி பகுதியை சேர்ந்தவர் முரளிகிருஷ்ணன். அதிமுக கட்சி மாணவரணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சின்னமுத்து மகள் சர்மிளா படிப்பு முடித்துவிட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

முரளி கிருஷ்ணன் ஷர்மிளா இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.மேலும் ஷர்மிளா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் முரளி கிருஷ்ணன் வீட்டில் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு உருவாகியது.


இந்த நிலையில் ஷர்மிளா வீட்டில் வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இன்று இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டனர் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு வழங்கினர் .

எனவே காவல்துறையினர் அவர்களுக்கு நம்பிக்கை அளித்து பாதுகாப்பு வழங்கினார்.

மற்றோரு சம்பவம்:

இதேபோல் சேலம் கன்னங்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி.இவரின் இரண்டாவது மகன் ராமதாஸ். தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரின் பக்கத்து ஊரான மன்னார்பாளையம் ரத்தினவேல் மகள் பிரியா கோரிமேடு பகுதியில் உள்ள அரசினர் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பி.ஏ ஹிஸ்டரி படித்துவந்தார்.

இந்த நிலையில் தினந்தோறும் கல்லூரிக்கு ராமதாஸ் வீட்டு வழியாக செல்கின்ற பொழுது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நட்பாக பழகி வந்தனர் நட்பு நாளடைவில் காதலாக மாறி கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர் இவர்களின் காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வந்தது. பிரியா தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் கடும் எதிர்ப்பு தெரிவித்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

ராமதாஸ் குடும்பத்தினர் அவருக்கு வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்த நிலையில் இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் இவர்கள் இரண்டு நபர்களும் வீட்டைவிட்டு வெளியேறி நங்கவள்ளி நரசிம்மர் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.இவர்கள் திருமணத்தை மணமகன் வீட்டார் ஏற்காமல் இவர் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்த நிலையில் இவர்கள் இரண்டு நபர்களும் உயிருக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடி சேலம் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

author avatar
Parthipan K