நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்?

0
278

நாட்டுக்கோழி முட்டை Vs பிராய்லர் கோழி முட்டை எதில் சத்து அதிகம்?

பலருக்கும் தற்போது வரை நாட்டுக்கோழி முட்டை மற்றும் பிராய்லர் கோழி முட்டை ஆகிய இரு முட்டைகளிலும் எந்த முட்டையில் சத்து அதிகம் என்ற சந்தேகம் இருக்கும்.இந்த பதிவில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் பிராய்லர் கோழி முட்டை ஆகிய இரு முட்டைகளில் எதில் அதிக சத்து உள்ளது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வு முடிவுகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

ஊட்டச்சத்தை பொருத்தவரையில் நாட்டு கோழி முட்டை மற்றும் பிராய்லர் கோழி முட்டை ஆகிய இரு முட்டைகளிலும் ஒரே மாதிரி தான் இருக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.முட்டை ஓட்டின் நிறத்திற்கும் ஊட்டச்சத்திற்கும் எந்த வகை சம்மதமும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நாட்டுக்கோழிகள் அதிகம் வெயிலில் நடமாடுவதால் அந்த கோழி முட்டையில் விட்டமின் டி சத்து அதிகமாக இருக்கும் என்றும் மேலும் கோழிகளுக்கு அளிக்கப்படும் உணவினை பொறுத்தும்,அவைகள் வளரும் சூழ்நிலை பொருத்தும் முட்டையில் சில மாறுதல் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும் இந்த இரண்டு வகை முட்டைகளுக்கு இடையே ஊட்டச்சத்தை பொருத்தவரையில் பெரிய வகையில் மாறுதல் இல்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எந்த முட்டையாகினும் அதிக நாட்கள் ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தாமல் வாங்கிய சில நாட்களிலேயே பயன்படுத்துவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயதுக்கு ஏற்றவாறு அளவோடு முட்டைகளை தருவது மேலும் நன்மை பயக்கும்.முட்டையை நன்றாக வேக வைத்தால் மட்டுமே முட்டையில் உள்ள முழுமையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும் என்பது ஆய்வின் உண்மை.

author avatar
Pavithra