கொரோனாவைரஸை விட கொடிய வைரஸ் உலகை தாக்கக்கூடுமா!!

0
74

பல டுவிஸ்ட் நிறைந்த வருடம்தான் 2020.காரணம் இந்த கொரோனா வைரஸ்,இதனால் ஏற்பட்ட தாக்கத்தின் பிடியிலிருந்து இன்னும் இந்த உலகமே மீளவில்லை என்றே கூறலாம்.கொரோனாவை நம்மிடம் இருந்து விரட்ட இந்த உலகம் பல முயற்சிகளை மேற்கொண்டாலும் கொரோனாதான் வெற்றி பெற்றது,இறுதியில் கொரோனாவுடன் வாழப்பழகியது தான் மிச்சம்.

கடந்த வருடம் 2020 அதன் பெயருக்கேற்றவாறு 20-20 மேட்ச் போல் முடிவடைந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகரமான பதிவு ஒன்றினை விஞ்ஞானி ஒருவர் வெளியிட்டுள்ளார்.கொரோனாவிற்கே இப்படி பயந்தால் எப்படி இதைவிட வருங்காலத்தில் வரவிருக்கும் ஒரு புதிய வைரஸ் “disease X” பற்றி கேட்டால் உலகமே நடுநடுங்கி விடும் போலவே!.

1976 ஆம் ஆண்டு பேராசிரியர் ஜூன் -ஜாக் முயம்பே தம்பம் என்பவர் எபோலா வைரஸை கண்டுபிடிப்பதில் முக்கியப் பங்காற்றியவர்.இவர் வருங்காலத்தில் ஒரு புதிய வைரஸ் disease X என்றழைக்கப்படும் வைரசால் உலகம் பல இன்னல்களை சந்திக்க கூடும் என தெரிவித்துள்ளார்.

தற்போது மக்கள் பல பெயர் தெரியாத வைரஸ்களுக்கிடையே வாழ்ந்து வருகின்றனர்.மேலும் இம்மாதிரியான வைரஸ்கள் ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல மழைக்காடுகளில் இருந்து உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எதிர்காலத்தில் வரவிருக்கும் இந்த நோய் தற்போது உள்ள கொரோனா வைரஸை விட மிகவும் ஆபத்தை ஏற்படுத்துவதாகவும்,மிக வேகமாக பரவும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் காங்கோ ஜனநாயக குடியரசின் மருத்துவர்கள் ஒரு பெண்ணிடம் புதிய வகையான தொற்று ஒன்றினை கண்டறிந்துள்ளனர்.மேலும் அந்தப் பெண்ணிற்கு ரத்தக்கசிவு மற்றும் காய்ச்சலின் ஆரம்ப அறிகுறிகள் இருப்பதை கண்டுபிடித்த மருத்துவர்கள் இது எபோலா வைரஸ் ஆக இருக்கலாம் என நினைத்து எபோலா வைரஸ் பரிசோதனை மேற்கொண்டனர்.அப்பரிசோதனையில் தோல்வியை தழுவிய நிலையில் இது disease X ஆக இருக்கலாம் என மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, disease X என்பது கற்பனையான ஒன்று எனவும், ஆனால் இது உண்மையானால் உலகம் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க கூடும் எனவும் வெளியிட்டுள்ளது.வரும்காலத்தில் disease X என்ற ஒன்று உண்மையானதா? அல்லது கற்பனையானதா? என்பது காலத்தின் கையில் தான் உள்ளது.

author avatar
Parthipan K