போலி கைத்தறி நெசவாளர்களை வைத்து பண மோசடி! அம்பலமாகும் மெகா ஊழல்

0
152

போலி கைத்தறி நெசவாளர்களை வைத்து பண மோசடி! அம்பலமாகும் ஊழல்

மீண்டும் ஒரு ஊழல் இந்த ஊழலை பலமுறை சுட்டிக்காட்டியும் கண்ணுக்கு தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு மக்களின் அடிப்படைத் தேவையான உடையை வைத்து நெசவாளர்கள் என்ற பெயரில் மோசடி செய்பவர்கள் நாளை உணவிலும் மெகா மோசடி செய்ய மாட்டார்களா என்று அச்சத்தில் ஏழை எளிய மக்களின் நலன் கருதி போராடிக்கொண்டு இருக்கிறார் சேலம் அத்திராம் பட்டி சேர்ந்த சமூக ஆர்வலர் மாரிமுத்து!!!

ஏழை எளிய கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட மத்திய மற்றும் மாநில அரசுகள் சர்வோதய சங்கங்கள் நாடு முழுவதும் துவங்கப்பட்டு நெசவாளர்களுக்கு தேவையான மூலப்பொருளாக பட்டு நூலை கொடுத்து அதனை உற்பத்தி செய்த புடவை மற்றும் துணி ரகங்களை பெற்றுக்கொண்டு நெசவாளர்களுக்கு தகுந்த கூலி நிர்ணயம் செய்து அவர்களுக்கு என தனியாக துவங்கப்பட்ட வங்கி கணக்குகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதனை முறைகேடாக பயன்படுத்தும் வகையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகில் உள்ள மல்லிகுட்டை கிராமம் அத்திராம்பட்டி சேர்ந்த சர்வோதய சங்க நிர்வாகிகள் கைத்தறி நெசவாளர் தொழிலுக்கும் சம்மந்தம் இல்லாத போலி நபர்களை வைத்துக்கொண்டு 500க்கும் மேற்பட்ட போனில் நபர்களுடைய வங்கிக் கணக்குகளை சேர்த்து கொண்டு உண்மையான நெசவாளர்களுக்கு போலி பயனாளிகளுக்கும் இதனால் வரையும் ஒரு ரூபாய் கூட சென்றடையவில்லை.

போலி பயனாளிகளை பிடித்து விசாரித்த போது எங்களிடம் ஆதார் கார்டு மற்றும் வங்கி பாஸ்புக் இவை அனைத்தையும் வாங்கிக் கொண்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ஆயிரம் மற்றும் 2000 மற்றும் வழங்கி வருகிறார்கள். அத்திரா ம் பட்டி சேர்ந்த ஓய்வு பெற்ற துணை காவல் அதிகாரி மாரிமுத்துவிடம் இந்த ஊழல் பற்றி தகவல் கேட்டபோது கடந்த 10 வருடமாக இந்த ஊழல் குறித்து பல பத்திரிக்கை மூலமாகவும், அரசு உயர் அதிகாரிகளுக்கு மனுக்கள் மூலமாகவும் இந்த சர்வோதய சங்க ஊழல் நிர்வாகிகளின் மோசடிகளை கண்டித்தும் போராடி வருகிறேன்.

இந்த போராட்டத்திற்கு எதிராக என் மீது எத்தனையோ வீண்பழி விமர்சனங்களும் அவதூறுகளும் சர்வோதய சங்க ஊழல் நிர்வாகிகளால் பரப்பி விட பட்டது. எழுத்தறிவும், படிப்பறிவு இல்லாத ஏழை எளிய அப்பாவி மக்களிடம் சென்று ஆதார் கார்டு மற்றும் வங்கி கணக்கையும் வாங்கிக்கொண்டு கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக இந்த சர்வோதய சங்கம் ஊழல் அதிகாரிகள் மிகப் பெரிய பண மோசடி செய்து வருகின்றனர்.

இதை அறிந்த போலி பயனாளிகள் அந்த நிர்வாகிகளை கேள்வி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த ஊழல் நடப்பதை தெரிந்து கொண்டு போலி பயனாளிகள் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மாரிமுத்து விடம் சென்று இங்கு நடக்கும் ஊழலை தெரிவித்துள்ளனர். இதை அறிந்து சர்வோதய சங்கம் ஊழல் நிர்வாகிகள் மாரிமுத்து மற்றும் போலி பயனாளிக்கு எதிராகவும் சர்வோதய சங்கங்களால் எந்த ஒரு பயனையும் அடையாத உண்மையான கைத்தறி ஏழை எளிய நெசவாளர்களுக்கு எதிராகவும் தமிழகத்தின் மிகப்பெரிய ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தன்னுடைய சங்க அதிகார பதவியையும் பணத்தையும் வைத்து போலி செய்திகளையும், போலி போராட்டத்தையும் நடத்தி வருகிறது இந்த மோசடி கும்பல்.

இந்த ஊழல் இந்த சேலம் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் இதுபோன்ற ஊழல் மோசடி கும்பல் பல பெரிய மெகா ஊழலை செய்து வருகின்றனர். இந்த ஊழலுக்கு எதிராக நான் செய்த போராட்டத்தை கண்டு இந்த சர்வோதய சங்கம் ஊழல் நிர்வாகிகளால் பாதிக்கப்பட்ட சங்க ஊழியர்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்கள் என்னை தொடர்புகொண்டு இந்த சங்கத்தில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்து கொண்டிருப்பதை ஆதாரத்துடன் அணுகி கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கிடையில் இந்த போராட்டத்தை மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்க ஆதரவு அளித்து வருகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள ஊழல் நிர்வாகிகள் விரைவில் பிடிபட இந்த போராட்டத்தை எந்த களத்திற்கு வேண்டுமானாலும் எடுத்துச்செல்ல அனைத்து தளங்களிலும் ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறது. விரைவில் இந்த போராட்டம் வெற்றியடைய தமிழக அரசும், மத்திய அரசும் இந்த ஊழலுக்கு எதிராக விசாரணை செய்ய தனி கமிஷன் அமைக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாட இருக்கிறோம் என்று சமூக ஆர்வலர் மாரிமுத்து தமிழக அரசு மற்றும் மாநில அரசுக்கு தெரிவிக்கின்றார்.