உலக அளவில் 45 கோடியை கடந்த நோய்த்தொற்று பாதிப்பு!

0
71

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல 220க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியது.

இதனால் பல உலக வல்லரசு நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. அதிலும் அமெரிக்கா இன்னமும் அந்த பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டு வர முடியாத சூழ்நிலையில் இருந்து வருகிறது.

இந்த நோய்த் தொற்று பரவலை சீனா வேண்டுமென்றே கண்டுபிடித்து உலக நாடுகளிடையே பரப்பி விட்டதாக சில தகவல்கள் வெளியாகின. அதோடு சமீபத்தில் சீனாவில் நடத்தப்பட்ட ஆய்வில் சீனாவில் இருக்கின்ற ஒரு ஆய்வகத்தில் தான் இந்த நோய் தொற்று முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டது.

முதலில் இந்த நோய் தொற்று பரவலை சீனா திட்டமிட்டு தான் பரப்புகிறது என்று உலகளவில் பேசப்பட்டு வந்தாலும் அது உறுதிப்படுத்த படாமல் இருந்த நிலையில், இந்த ஆய்வின் முடிவு அதனை உறுதி செய்துவிட்டது.

இந்த நோயால் உலகம் முழுவதும் இந்த நோய் தொற்றுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதோடு இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உள்ளிட்ட முக்கிய பல்கலைக்கழகங்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

அதோடு இந்தியாவிலும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நாடு முழுவதும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது.

ஆனாலும் கூட உலகம் முழுவதும் இந்த நோய்த்தொற்று பரவல் இன்னமும் முழுமையாக குறைந்தபாடில்லை.

இவ்வாறான நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தடுப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,58,57,193 என அதிகரித்திருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,17,75,380 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சொல்லப்படுகிறது.

நோய்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 45,78,54,044 பூரண குணமடைந்திருக்கிறார்கள். ஆனாலும் நோய்த்தொற்று பரவல் உலகம் முழுவதும் இதுவரையில் 62,27,769 பேர் பலியாகியிருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.