உலக அளவில் 26 கோடியை கடந்த நோய்த்தொற்று பரவல்!

0
49

சீனாவில் நடந்த 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது ஆனால் தற்சமயம் இந்த நோய்த்தொற்று உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கி வருகிறது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகின்றன.

ஏற்கனவே உலக அளவில் பொருளாதாரம் மந்த நிலையில் இருந்த சூழ்நிலைகளில், இந்த நோய் தொற்று காரணமாக, உலக அளவில் பொருளாதாரம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது, ஆகவே உலக நாடுகள் அனைத்தும் சீனாவின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறது.

அதன் நீட்ச்சியாக ஐநா சபையில் உலக நாடுகள் அனைத்தும் இணைந்து சீனாவின் மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவதற்கும் தயார் நிலையில் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடந்து வருகின்ற சூழ்நிலையிலும் இந்த நோய்த்தொற்று உருமாற்றம் அடைந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 32,86,58 ,754 ஆக அதிகரித்திருக்கிறது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள். 5,5,3,830 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து இதுவரை 26,21,97,318 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இருந்தாலும் நோய் தொற்று பரவலால் உலகம் முழுவதும் இதுவரை 55,57,586 பேர் பலியாகி இருக்கிறார்கள்.