மகிழ்ச்சி! உலகளாவிய நோய்த் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 46 கோடியை கடந்தது!

0
81

கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல உலக நாடுகள் மத்தியில் பரவி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த நோய் தொற்று பரவல் சுமார் 220 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பரவி மிக கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

இதற்கிடையில், இந்த நோய்த்தொற்று பரவல் அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட உலக பொருளாதார வல்லரசு நாடுகள் பலவற்றில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் சமீபத்தில் உக்ரைன் நாட்டில் ரஷ்யா அதனுடைய உக்கிரமான போரை தொடர்ந்து தற்போது வரையில் அந்த போர் நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த போரில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

அந்த நாட்டில் பரபரப்பு நிலவி வருகிறது ஆனாலும் எந்த விதத்திலும் ரஷ்யாவிலும் ,உக்ரைனிலும் நோய் தொற்று பாதிப்பு அதிகரித்ததாக தெரியவில்லை. இவையெல்லாம் உற்றுநோக்கி பார்த்தால் இந்த நோய்த்தொற்று பரவலை வைத்து உலகளவில் அரசியல் நடைபெறுகிறது? என்று எண்ண தோன்றுகிறது.

இந்தநிலையில், நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளை செலுத்தும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் நோய்த்தொற்று பரவல் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது.

ஆகவே உலகம் முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,94,68,263 என அதிகரித்திருக்கிறது. நோய்த்தொற்று பரவல் காரணமாக, பாதிக்கப்பட்டவர்களில் 4,12,17,084 சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 46,20,8,291 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இருந்தாலும் நோய்த்தொற்று பரவல் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரையில் 62,42,888 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.