உலகளாவிய கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்தது!

0
65

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்சமயம் உலக நாடுகள் முழுவதும் பரவிக்கிடக்கிறது இந்த நோய் தாக்கம் காரணமாக, பல்வேறு உலக நாடுகள் பல விதமான பாதிப்புகளை சந்தித்து இருக்கின்றன.

அதோடு உலக நாடுகள் அனைத்திற்கும் மிகப்பெரிய பொருளாதார இழப்பையும் இந்த நோய்த்தொற்று பரவல் ஏற்படுத்தியிருக்கிறது. இதில் மிகவும் அதிக பாதிப்புகளை சந்தித்தது அமெரிக்கா இன்னும் சொல்லப்போனால் அமெரிக்காவை குறிவைத்து தான் இந்த நோய்த்தொற்று பரவல் பரப்பப்பட்டது என்றும் ஒரு சிலர் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நோய் தொற்று பரவலை தொடங்கிவைத்த சீனாவின் மீது ஐநா சபையில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், கோரிக்கை எழுந்திருக்கிறது. அதேநேரம் ஐநா சபையில் இதுதொடர்பாக வாக்கெடுப்பு நடைபெற்றால் சீனாவிற்கு எதிராக வாக்களிப்பதற்கு பல உலக நாடுகள் தயார் நிலையில் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய் தோற்று காரணமாக, பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 27.89 கோடியை கடந்து இருக்கிறது. இந்த நோய் தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 24.95 கோடியை கடந்து இருக்கிறது.

அதோடு இந்த வைரஸ் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 54 லட்சத்தை கடந்தது, இந்த வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2.40 கோடிக்கும் அதிகமான நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெற்று வருபவர்களில் 88000 அதிகமானவரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.