கங்குலிக்கு நோய்த்தொற்று உறுதி! கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி!

0
66

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் நோய்தொற்று நாடு முழுவதும் பரவி அனைவரையும் பல இன்னல்களுக்கு ஆளாக்கி வருகிறது.

அத்துடன் பொருளாதார ரீதியாகவும் நாடு மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கிறது, முக்கிய பிரமுகர்களை இந்த நோயின் காரணமாக, நாடு இழந்திருக்கிறது.அதில் நடிகர் விவேக், பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம், இயக்குனர் கே.வி. ஆனந்த் உள்ளிட்ட பிரமுகர்கள் உள்பட மிக முக்கிய பிரமுகர்கள் அடங்குவார்கள்.

இந்த நிலையில் இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய, மாநில, அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக நடைபெற்று வருகிறது. ஆனால் நோய்த்தொற்றின் புதிய உருமாற்ற தொற்றான ஒமைக்ரான் வைரஸ் தற்போது இந்தியாவில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரையில் இந்த நோய் தொற்று பாதிப்பு 34 பேருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவரும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனுமான சவுரவ் கங்குலி அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. நோய்தொற்று உறுதியான சூழ்நிலையில், கல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்கள் சென்ற வருடம் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த சூழ்நிலையில், தற்சமயம் அவரும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.