மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்?

0
225
Corona will peak again! Curfew enforcement?
Corona will peak again! Curfew enforcement?

மீண்டும் உச்சமடையும் கொரோனா! ஊரடங்கு அமல்?

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் அனைத்து இடத்திற்கமான போக்குவரத்து சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொழில் நிறுவனங்களும் முடங்கியது. பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு வகுப்புகள் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. பொது தேர்வு  மற்றும் போட்டி தேர்வு என அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் மீண்டும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் உருமாற்றமடைந்த கொரோனா மீண்டும் எழுச்சி பெற தொடங்கியது. அதனால் சர்வதேச விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனவரி மாதத்தில் கொரோனா பரவல்  குறைந்து வந்த நிலையில் மீண்டும் இந்தியாவில் பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

அதனால் மாநில அரசுகளும், மத்திய அரசும் தொடர்ந்து பல அறிவுறுத்துகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று  அதிகரித்து வருவதனால் மக்கள் அனைவரும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் நாட்டின் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அந்த கடிதத்தில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் ஐந்து அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஐந்து அம்சம் என்பது பரிசோதனை, தடுப்பூசி மற்றும் தொற்றை  கண்டறிதல் ஆகியவற்றை குறிக்கும் இதனை போலவே அனைத்து மாநிலத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில்  நான்கு மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 கடந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தமிழகத்தில் 102 பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்த பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தால் தமிழகத்தில் முக கவசம் கட்டாயம், சமூக இடைவேளை, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Parthipan K