இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும் ! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

0
46

இனி இளைஞர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகம் ஏற்படும்? உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் நோய் தொற்று உலகளாவிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இது ஆறு மாதங்களையும் கடந்து பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இதைப்பற்றி உலகளாவிய உலக சுகாதார அமைப்பு கூறுவது ‘ இனி இளைஞர்கள் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவார்கள்’ என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது

 

கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி 1.7 கோடி மக்களை பாதித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் ,ஜெர்மனி, இந்தியா, சீனா என்ற பல நாடுகளில் பரவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு இன்னும் தீர்வு தென்படவில்லை.இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதும் இளைஞர்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்று கூறியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இதுபற்றி, உலகம் முழுவதும் இளைஞர்கள் அதிகமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே ,அனைத்து நாடுகளில் உள்ள இளைஞர்களும் சமூக பரவலை கடைபிடித்து தங்களை தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இனி இளைஞர்களை இந்த நோய் அதிகமாக பாதிக்கும் என்றும் எச்சரிக்கிறார்.

 

தடுப்பூசி விவரம் பற்றி அவர் கூறும் பொழுது, மக்கள் எந்த பகுதியில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு முறையான தடுப்பு ஊசிகள் வழங்கப்பட வேண்டும். ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். அதை எதிர்கொண்டு நடைமுறைப்படுத்த நாங்கள் செயல்பட்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

 

 

author avatar
Kowsalya