பாராளுமன்றத்தில் கொரோனா பற்றி 50நாட்களுக்கு முன்பே எச்சரித்த தலைவர் : மத்திய அரசு மெத்தனம்!

0
122

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் காட்டுத்தீ போல் பரவி வருவதால் பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.

இந்த அதிரடி உத்தரவை அடுத்து மக்கள் கூட்டம் கூடும் பொது இடங்களை மூடுமாறு முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர வேறு எந்த காரணத்துக்காகவும் மக்கள் பொது இடங்களுக்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் ராஜ்யசபா எம்பி அன்புமணி ராமதாஸ் கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி பாராளுமன்றத்தில் கொரோனா வைரஸின் ஆபத்தை உணர்த்தும் விதமாக எடுத்து கூறியுள்ளார். அவர் மாநிலங்கள் அவையில் பேசி அந்த தகவலை அன்றே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அந்த டுவிட் தற்போது தமிழக மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பல விருதுகளை பெற்ற சாதனையாளர் அன்புமணி ராமதாஸ், அவரது எச்சரிக்கையை அன்றே செவி கொடுத்து கேட்டிருக்கலாம் என மத்திய அரசை நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.

author avatar
Parthipan K