நோய்தொற்று தடுப்பூசி கர்ப்பம் தரிப்பதை குறைக்குமா? அமெரிக்க நிபுணர் பரபரப்பு விளக்கம்!

0
76

தற்போது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி,திருமணம் என்பது இந்த வயதில் தான் நடைபெற வேண்டும் என்பது சட்டரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதோடு குழந்தைகளாக இருக்கும் பெண்களுக்கோ அல்லது ஆண்களுக்கோ திருமணம் செய்தால் அவர்கள் வாழ்வியல் சூழலை எதிர் கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருக்கும் என்ற காரணத்தால், இந்த முடிவு முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் தற்சமயம் படிப்பு ,வேலை, சம்பாத்தியம், உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு திருமண வயதை கடந்த பிறகும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

இந்த நிலையில், அவர்கள் காலம் கடந்து திருமணம் செய்வதால் பலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலே போகிறது.சற்றேறக்குறைய 75 சதவீத மக்களுக்கு இயற்கையாக கருத்தரிப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.

இந்தநிலையில், நோய் தொற்று தடுப்பூசி செலுத்தி கொண்டால் பெண்கள் கருத்தரிப்பது குறைகிறது, நோய்த்தொற்று பரவல் ஆண்களின் கருவுற செய்யும் ஆற்றலை குறைக்கிறது, என்றெல்லாம் தகவல் வெளியாகியிருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்காவின் ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்களுக்கான தேசிய நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் ஆண்டனி பாசி விளக்கம் வழங்கியிருக்கிறார்.

அவர் தெரிவித்ததாவது, நோய்த்தொற்று பரவல் தடுப்பூசி கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறது என்பது தவறான தகவலாகும், நோய்த்தொற்று தடுப்பூசி கருவுறுதலை எதிர்மறையாக பாதிக்காது என்பதை புதிய தரவுகளும், இதற்கு முந்தைய ஆய்வுகளும் சுட்டிக்காட்டுகின்றன.

கர்ப்பம் தரிப்பதை தடுப்பூசிகள் குறைக்கும் என்பதற்கும் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது என தெரிவித்திருக்கிறார்.

அதே சமயத்தில் நோய் தொற்று பரவலால் ஆண்களின் கருவுறச் செய்யும் ஆற்றல் சற்றே குறைகின்றது, இருந்தாலும் இந்த பிரச்சனை தற்காலிகமானதுதான் அது நோய்த்தொற்றுடன் தொடர்புடையது, தடுப்பூசியால் இல்லை அவர் தெரிவித்திருக்கிறார்.