கொரோனா தடுப்பூசி பாயுது நடவடிக்கை! மத்திய அரசு எச்சரிக்கை!

0
82

கொரோனா தடுப்பூசி தொடர்பாக வீண் வதந்திகளை பரப்புவோர் மீது மிகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஒட்டுமொத்த உலகத்தையும் நடுநடுங்க வைத்து வரும் தொற்றிற்கு முடிவு கட்டும் வகையில், ஆராய்ச்சியாளர்கள் அந்த நோய்க்கு எதிரான தடுப்பு ஊசிகளை தயார் செய்து வருகிறார்கள். இதில் பி பைசர் கோவிஷீல்டு ,கோவாக்‌சின், போன்ற தடுப்பூசிகள் தற்சமயம் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் இந்த மாதம் 16ஆம் தேதி தொடங்கி நேற்று மாலை சுமார் ஏழு முப்பது மணி வரை 28 ஆயிரத்து 613 முகாம்களில் 16 லட்சத்திற்கும் மேலான சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாட்டில் இதுவரையில் 61 ஆயிரத்து 720 நபர்கள் இந்த தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த தடுப்பூசி குறித்த பல அவதூறு தகவல்கள் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில், தடுப்பூசி தொடர்பாக வீண் வதந்தி பரப்புபவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை பாயும் என்று மத்திய அரசு எச்சரிக்கை செய்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் நேற்றைய தினம் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிவிப்பில் இந்திய நாட்டில் தற்சமயம் பயன்படுத்தப்பட்டு வரும் இரண்டு வகையான கொரோனா தொற்றின் தடுப்பூசிகள் இந்திய மருத்துவ தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் மிகவும் பாதுகாப்பானவை என்று உறுதி அளிக்க பட்டு இருக்கிறது. ஆகவே தடுப்பூசி தொடர்பாக ஒரு குழுவோ, அல்லது தனி நபரோ, அல்லது ஒரு அமைப்போ வீண் வதந்தி பரப்புமானால் பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் ,என மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிடமிருந்து இந்த தடுப்பூசியை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள். ஆனாலும் நம்முடைய நாட்டு மக்களில் பல பேர் அதை உபயோகப்படுத்த தயங்கி வருகிறார்கள் .பக்க விளைவுகள் இன்றி தடுப்பூசிகளை உலகத்தில் கிடையாது இந்த தடுப்பூசிகள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை ,பாதுகாப்பு அம்சம் மிகுந்தவை, ஆகவே எல்லோரும் தயக்கமில்லாமல் இந்த தடுப்பூசியை பயன்படுத்தலாம் சில அரசியல் காரணங்களுக்காக தடுப்பூசி தொடர்பாக அவதூறுகளை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்திருக்கிறார்.