ரூ.103 மதிப்புள்ள கொரோனா மாத்திரை பயன்படுத்த தமிழக அரசு தயக்கம்! ஏன்.. எதற்காக.?

0
85

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த புதிதாக பேவிபிராவிர் என்ற மாத்திரைக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு கழகம் அனுமதி அளித்த நிலையில் சில காரணத்தினால் அதனை நோயாளிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசு தயக்கம் காட்டி வருகிறது.

மும்பையில் உள்ள பிரபல கிளென்மார்க் என்னும் மருந்து தயாரிப்பு நிறுவனம் முதன்முதலில் பேவிபிராவிர் மாத்திரையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. பெபிப்ளூ என்ற பிராண்ட் பெயரில் இந்த மாத்திரை கூடிய விரைவில் மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளின் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இதன் ஒரு மாத்திரை ரூ.103 க்கும், 34 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையின் விலை ரூ.3,500 க்கும் விற்கப்படும். இது லேசான காய்ச்சலில் பாதிப்பான நோயாளிகளுக்கு வழங்கலாம்.

இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை செயலளார் ராதாகிருஷ்ணன் கூறியதாவது; பேவிபிராவிர் மாத்திரைக்கு இதுவரை ஐசிஎம்ஆர் அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை. ஐசிஎம்ஆர் விதிகளைப் பின்பற்றிதான் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே ஐசிஎம்ஆர் அனுமதிக்கு பின்பே இந்த பேவிபிராவிர் என்னும் கொரோனா மாத்திரை கொள்முதல் செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். மேலும் இந்த மாத்திரை நம்பகத்தன்மை குறித்து பல சந்தேகங்கள் உள்ளன. இவற்றிற்கெல்லாம் விரிவான விடை கிடைத்த பிறகே முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு முடிவெடுக்கப்படும்’ என்று கூறினார்.

author avatar
Jayachandiran