முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது? ஊரடங்கு குறித்து முக்கிய முடிவுகள் வெளியாக வாய்ப்பு!

0
62

கொரோனா பாதிப்பால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் வந்தது. இதனால் ஏழை, எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதித்ததோடு பெரும் நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வியாபாரமும் பாதித்தது.

இதனையடுத்து மே மாதத்தில் சிறு கடைகள் மற்றும் உணவு விடுதிகள் போன்றவற்றிற்கு கட்டுப்பாடு விதிமுறையுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கொரோனா தீவிரமாக பரவி வருவதை கருத்தில் கொண்டு ஜூன் 30 வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதல்வர் அறிவித்தார். மேலும் ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்திற்கு பின் தீவிரமான கொரோனா பாதிப்பு பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்புண்டு என எதிர்பார்க்கப்படுகிறது.

நோய் தொற்று பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளுடன் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கலாம் என்றும் குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நோய் தொற்று அதிகம் இருப்பதால் கடுமையான விதிமுறை கடைபிடிக்க வாய்ப்பிருக்கலாம்.

முதல்வரின் ஆலோசனை கூட்டம் முடிந்த பின்னர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

author avatar
Jayachandiran