மூன்று மாதங்களுக்கு 144 தடை நீட்டித்த மாநில அரசு! கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை.!!

0
66

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மேலும் மூன்று மாதங்களுக்கு 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் அம்மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் சமர்பித்த அறிக்கையின்படி நிலைமை இன்னும் சரியான கட்டுப்பாட்டில் வரவில்லை என்றும், மேலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் மே 31 ஆம் தேதி வரை சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உணவகங்கள், பார்கள், கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் அடுத்த உத்தரவு வரும்வரை மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அடுத்த மூன்று மாதங்களுக்கு 144 தடை நீட்டிக்கப்படுவதாகவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 92 பேராக அதிகரித்துள்ளது. 33 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 55 பேர் மருத்துவ சிகிச்சையின் மூலம் குணமடைந்து வீட்டிற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran