ஊரடங்கால் ஏற்பட்ட மத ஒற்றுமை! மனிதநேயத்துடன் உதவிய முஸ்தபா அறக்கட்டளை! எங்கே நடந்தது தெரியுமா.?

0
78

ஊரடங்கால் ஏற்பட்ட மத ஒற்றுமை! மனிதநேயத்துடன் உதவிய முஸ்தபா அறக்கட்டளை! எங்கே நடந்தது தெரியுமா.?

கொரோனா பாதிப்பில் இந்து ஐயர் ஒருவருக்கு இஸ்லாமியர்கள் நிவாரண உதவி அளித்திருப்பது மத நல்லிணக்கத்தை உண்டாக்கியுள்ளது.

சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உலகத்தில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சம் பேரை பாதித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்சு, இத்தாலி, பிரிட்டன், வடகொரியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் தொற்று அதிகமாக காணப்படுகிறது. இதனால் இந்தியா முழுக்க மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு அரசியல் கட்சிகள், சமூக சேவகர்கள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ஐயங்கடை பகுதியில் பள்ளிவாசல் ஒன்று இயங்கி வருகிறது. அந்த மசூதியில் உள்ள இமாம் முகமது ருஸ்தும்அலி என்பவர் ஏற்பாட்டில் ‘ரசா ஏ முஸ்தபா அறக்கட்டளை ” என்ற அறக்கட்டளை ஒன்று இயங்கி வருகிறது. இதன் மூலமாக பாதித்தோருக்கு இஸ்லாமியர்கள் உதவி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வடக்கு வீதியில் அமைந்துள்ள விநாயகர் கோவில் அர்ச்சகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உதவியாக அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். அதை அவரும் நட்போடு வாங்கிக் கொண்டார். இச்சம்பவம் இணையத்தில் பரவி பலரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறக்கட்டளை சார்பில் கூறியதாவது; ஆபத்து நேரத்தில் தவிப்பவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம். இது எங்களுக்கு மகிழ்ச்சியையும், இரண்டு மதங்களுக்கிடையே சகோதரத்துவத்தை உண்டாக்குவது போன்ற நிம்மதி தருவதாக கூறியுள்ளார்.

author avatar
Jayachandiran