ஆல்ப்ஸ் மலையை அலங்கரித்த இந்திய கொடி! கொரோனா விவகாரத்தில் இந்தியாவிற்கு சுவிட்சர்லாந்து பாராட்டு.!!

0
75

ஆல்ப்ஸ் மலையை அலங்கரித்த இந்திய கொடி! கொரோனா விவகாரத்தில் இந்தியாவிற்கு சுவிட்சர்லாந்து பாராட்டு.!!

கொரோனா பாதிப்பை சிறப்பான முறையில் எதிர்கொண்டு வரும் இந்தியாவை பாராட்டும் வகையில் சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் இந்திய கொடியை அந்நாட்டு அரசு ஜொலிக்க வைத்துள்ளது.

இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பல்வேறு நாடுகள் ஏற்கனவே பாராட்டியுள்ள நிலையில், உலக சுகாதார மையமும் பாராட்டியுள்ளது. இதேபோல் தற்போது சுவிட்சர்லாந்து இந்திய நாட்டை வித்தியாசமான முறையில் வெகுவாக பாராட்டியுள்ளது. இந்தியாவை கெளரவிக்கும் விதமாக அந்நாட்டில் உள்ள உலகளவில் பிரபலமான ஆல்ப்ஸ் மேட்டர்ஹார்ன் மலை முழுவதும் இந்திய கொடிகளின் மூவர்ணம் போர்த்தியவாறு லேசர் விளக்குகளால் மின்னியது. சுவிட்சர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் இதனை டுவிட்டரில் பதிவு செய்துள்ளது.

இக்கட்டான அபாய சூழலில் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு உதவியதற்காக இந்த கெளரவத்தை அளிப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டுவிட்டரில் கருத்து கூறிய மோடி, கொரோனா பாதிப்பை உலக நாடுகளே ஒற்றுமையுடன் எதிர்த்து வருகிறது. இந்த பெருந்தொற்று நோயை மனிதம் வெல்லும் என்று கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து ஒளி கலைஞர் கேரி என்பவர் சுமார் 14,690 அடி உயரமுள்ள ஆல்ப்ஸ் மலையில் இந்தியாவின் கொடியை ஒளிரச் செய்துள்ளார். இதற்கு முன்பு அமெரிக்காவை கெளரவிக்கும். விதமாக அந்நாட்டு கொடியை அங்கு ஒளிர செய்தது குறிப்பிடத்தக்கது.

author avatar
Jayachandiran