சீனாவில் 94 சதவீத இறைச்சி கடைகள் திறப்பு! அசைவ உணவுகள் அமோக விற்பனை! திருந்தவே மாட்டிங்களா..?

0
92

சீனாவில் 94 சதவீத இறைச்சி கடைகள் திறப்பு! அசைவ உணவுகள் அமோக விற்பனை! திருந்தவே மாட்டிங்களா..?

சீனாவில் மீண்டும் அசைவ உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகம் திறக்கப்பட்டு அமோக விற்பனை நடந்து வருகிறது. இதனால் உலக நாடுகள் சீனா மீது கோபத்தில் இருக்கின்றன.

சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவி பல லட்சம் உயிர்களை பலிவாங்கியது. இதையடுத்து அங்கு இருந்த அனைத்து மார்க்கெட்டையும் மூடுமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. அமெரிக்கா, இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இன்னும் கொரோனாவின் தீவிர பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தினசரி உயிரிழப்பு குறைந்தாலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சீனாவில் வெட் மார்க்கெட் எனப்படும் சைவ மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படும் மார்க்கெட்டில் இறைச்சி கடைகள் உட்பட 94 சதவீத கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் உலக நாடுகளை மீண்டும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா உருவான வூகான் பகுது கடல் உணவு சந்தைக்கு மட்டுமே பூட்டி சீல் வைத்துள்ளனர். அதோடு முதலை கறி, பாம்பு கறி, வன விலங்குகளை மார்க்கெட்டில் விற்கவும் சீன அரசு தடை விதித்துள்ளது.

கடல் உணவான நண்டு, மீன் போன்ற உணவுகளின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. சுகாதாரமற்ற இறைச்சிகள் சீனாவில் விற்கப்படுகிறது. அதிலிருந்து புதிய வைரஸ்கள் உண்டாகலாம் என்கிற பயத்தில் உலக நாடுகள் சீனா மீது கோபத்தில் உள்ளன. கொரோனாவின் பாதிப்பே இன்னும் சீராக தீர்க்கமுடியாத சூழலில் சீனாவில் அசைவ விற்பனைக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளன. இதுசம்பந்தமாக அமெரிக்க எம்பிக்கள் அந்நாட்டு சீன தூதரகத்தில் கடிதம் ஒன்றை அனுப்பி எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும் சீனாவின் அசைவ மார்க்கெட்டுகளை திறக்க அனுமதித்த உலக சுகாதார அமைப்பை ஆஸ்திரேலிய பிரதமர் ஸகாட் மோரிசன் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

author avatar
Jayachandiran