கொரோனா பாதிப்பு: மே மாத ரேசன் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசாணை வெளியீடு!

0
75

கொரோனா பாதிப்பு: மே மாத ரேசன் நிவாரண பொருட்களை வழங்க தமிழக அரசாணை வெளியீடு!

கொரோனா பரவலை தடுக்கு தமிழக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் தேவையான அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்களின் வீட்டுக்கே சென்று வழங்கியது. இதனுடன் ரூ.1,000 பணமும் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பால் ஊரடங்கு மே மாதம் 3 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் மக்களின் அடிப்படை உணவு தேவையின் சிக்கலை புரிந்து தமிழக அரசே நடவடிக்கை எடுத்துள்ளது. மே மாதம் தேவையான கொரோனா நிவாரண இலவச பொருட்களை வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.184.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1300 ஐ தாண்டியுள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸ் பரவலை தடுக்க தமிழக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் பகல் இரவாக தீவிர பணியாற்றி வருகின்றனர். மேலும் அனைவரும் வீட்டில் இருக்குமாறும் அவசர தேவைக்காக வெளியே வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

author avatar
Jayachandiran