ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!!

0
70

ஊரடங்கை மீறி மசூதியில் கூட்டுத் தொழுகை! போலீசார் நடத்திய பிரம்படி பூஜையில் தலைதெறிக்க ஓட்டம்.!!

கொரோனா பாதிப்பு பரவாமல் இருக்க போடப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டுத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹவேரி பகுதியில் கொரோடா ஊரடங்கு உத்தரவை பற்றி தெரிந்தும் வீட்டில் இருக்காமல் தனிமனித இடைவெளி கடைபிடிக்காமல் தொழுகை நடத்துவதாக அப்பகுதி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார் மசூதிக்கு சென்று அங்கிருந்தவர்களை எச்சரித்து வெளியேறுமாறு கூறினர்.

காவல்துறையினரின் வருகைக்கு பிறகு மசூதியில் இருந்து ஒவ்வொருவராக வெளிய வரத்தொடங்கினர். மசூதிக்கு வெளியே இருந்த காவல்துறையினர் கையில் இருந்த பிரம்பின் மூலம் அடியை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். சமூக விலகல் இல்லாமல் கூட்டமாக சேர்ந்து வழிபாடு நடத்துவது தவறில்லையா.? என்று போலீசார் கேள்வி கேட்டு எல்லோரையும் உதை கொடுப்பதோடு புத்திமதியோடு அனுப்பினர்.

உள்ளே இருந்து வயதான ஒருவர் வெளியே வந்தபோது அவரை காவலர்கள் அடிக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். அவருக்கு பின்னால் தப்பித்து ஓட நினைத்த சிறுவனுக்கு ஒரு அடி விழுந்தது. இதையடுத்து உத்தரவை மீறி தொழுகை கூட்டத்தை ஏற்பாடு செய்த மூத்த குருவுக்கு போலீசார் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டது. இதேபோன்று மதுரையில் ஊரடங்கை மீறிய சம்பவமும் நடந்தது.

மதுரை மாவட்டம் சுப்ரமணியபுரத்தில் இப்ராகிம் என்பவர் தலைமையில் ஊரடங்கு உத்தரவை மீறி அவரது வீட்டிற்குள் 20 பேர் தொழுகை நடத்தினர். இவர்களின் மீது 5 பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்துபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். மேலும் கலைந்து செல்ல மறுத்ததால் 20 பேரும் கைது செய்யப்பட்டனர். கொரோனாவுக்கு மதம் கிடையாது யாரை வேண்டுமானாலும் எப்போதும் தாக்க வாய்ப்புள்ளது. ஆகவே வழிபாடு செய்ய நினைப்போர் அவரவர் வீட்டிலேயே செய்வது நல்லது என்று பலர் கருத்து கூறியுள்ளனர்.

author avatar
Jayachandiran