“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ)

0
90

“குருமா’ வருதுன்னு சொன்னாங்க..!! அதான் வேப்பிலைய வச்சிகிட்டு வேலைக்குபோறேன்! ஊரடங்கு தூய்மை பணியில் மூதாட்டியின் நகைச்சுவை பேச்சு (வைரல் வீடியோ)

ஊரடங்கு தூய்மை பணியில் ஈடுபடும் மூதாட்டி ஒருவர் கொரோனாவை பற்றி பேசிய நகைச்சுவை வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் அரசு தீவிரமான கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தை விட புதுவையில் கொரோனா பாதிப்பு மிக குறைவு. இதுவரை அங்கு 7 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பாதிப்பு நேரத்தில் தூய்மை பணிக்கு செல்லும் மூதாட்டி ஒருவர் கொரோனா பற்றிய பேசிய விழிப்புணர்வு காணொளி இணையத்தில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் எதற்காக தலையில் வேப்பிலை வைத்திருக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு மூதாட்டி கொடுத்த பதில் மிக நகைச்சுவையாக அமைந்துள்ளது.

https://m.facebook.com/story.php?story_fbid=10156794651625855&id=720730854 (மூதாட்டி வைரல் வீடியோ)

தலையில ஏன் வேப்பில வச்சிருக்கீங்க.?
குருமா வருதுனு சொன்னாங்க’ அதான் தலையில வேப்பில வெச்சுகிட்டு வேலைக்கி போறேன்’ என்று பேசும் மூதாட்டியின் வெகுளியான பேச்சு எல்லோரையும் கவர்ந்துள்ளது. படித்த பலர் அரசின் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் இருக்கும் பலருக்கு மத்தியில், அரசுக்கு செவிசாய்த்து தன்னை பாதுகாத்துக் கொள்வதில் இந்த மூதாட்டி கெட்டிக்காரர் என்றே கூறலாம். நோய் மற்றும் ஆபத்து என்றாலே மஞ்சளும், வேப்பிலையும் கையில் எடுப்பது தமிழர்களின் மரபு என்பதை நம் முன்னோர்கள் நிரூபித்தே வருகின்றனர்.

author avatar
Jayachandiran