கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தும் அமெரிக்கா! தினசரி அதிகரிக்கும் உயிரிழப்பு

0
53

கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தும் அமெரிக்கா! தினசரி அதிகரிக்கும் உயிரிழப்பு

உலக நாடுகளில் பரவி பலாயிரம் உயிரை பலிவாங்கிய கொரோனா சீனாவில் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது சீனாவின் உயிர்பலியை விட அமெரிக்காவில் அதிக உயிரிழப்பு ஏற்படவுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு சீனாவை முந்தும் விதமாக இருந்து வருகிறது. கடந்த 5 நாட்களாக அமெரிக்காவில் கொரோனா தொற்று புதிதாக 18,000 பேருக்கு மேல் பரவியுள்ளது. உச்சகட்டமாக நேற்றைய முன்தினம் மட்டுமே 573 பேர் பலியாகினர். இதுவரை கொரோனாவால் அமெரிக்காவில் ஏற்பட்ட ஒட்டுமொத்த உயிரிழப்பு 3,170 ஆகும். சீனாவில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,309 ஆகும். இதனால் விரைவில் சீனாவை அமெரிக்க முந்தும் என்று கூறப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் கொத்து கொத்தாக இறந்துபோனவர்களின் உடல்கள் குளிரூட்டிய வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு புதைக்கப்படும் காட்சி அனைவரையும் பீதி அடையச் செய்துள்ளது. இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரத்தில் உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்க அதிபர் கூறியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப் பேசியபோது; இன்றும் இரண்டு வாரங்களுக்கு அமெரிக்காவில் உச்சகட்டத்தை அடையலாம், இது சாவாலான நாட்கள் என்றாலும் எனது முதல் நோக்கம் மக்களைக் காப்பதுதான், இதன் பிறகே நம் பொருளாதாரம் காக்கப்படும் என்றும் நம் தியாகமும், நமது நம்பிக்கையுமே வைரசுக்கு எதிரான வெற்றியை தீர்மானிக்கும் என்று கூறினார்.

கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் ஒரு லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் படுமோசமான உயிரிழப்பு நடந்து கொண்டிருந்தாலும், அங்கு தற்போது கொரோனா பாதிப்பு நோயாளிகள் குணமடைந்து வருவதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளன. இந்த இரண்டு நாடுகளில் ஒரேநாளில் 1,701 பேர் இறந்துள்ளனர். இத்தாலியில் 11 ஆயிரத்தையும், ஸ்பெயினில் 8 ஆயிரம் உயிரிழப்புகளையும் அந்நாடுகள் சந்தித்துள்ளன.

உலகளவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,000 தாண்டியுள்ளது. மேலும் உலக நாடுகளில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30 ஆயிரம் பேரின் உடல்நிலை மோசமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே கொரோனா பற்றிய அச்சம் இன்னும் தணியவில்லை என்றே கூறலாம்.

author avatar
Jayachandiran