ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.!

0
124

ராஜஸ்தானில் 41 பேருக்கு கொரோனா! இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியது.!

ராஜஸ்தான் மாநிலத்தில் புதிதாக 41 பேருக்கு கொரோனா பதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,270 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மாநில வாரியான கொரோனா பதிப்பு எண்ணிக்கயால் மக்களிடையே அச்சம் தொடர்ந்து நிலவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதித்த நபர்களின் எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது. 180 பேர் மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலங்களின் பாதிப்பு எண்ணிக்கை:

கேரளா பாதிப்பு 396 பேர் பாதித்துள்ளனர்.
கர்நாடகாவில் 359 பேர் பாதித்துள்ளனர்.
ஆந்திராவில் 572 பேர், தெலுங்கானாவில் 766 பேர், கோவாவில் 7 பேர், மகாராஷ்டிராவில் 3,323 பேர், சத்தீஸ்கரில் 36 பேர், அந்தமானில் 12 பேர், மத்திய பிரதேசத்தில் 1,310 பேர், ஒடிசாவில் 60 பேர், மேற்கு வங்காளம் 287 பேர், ஜார்க்கண்ட் 33 பேர், குஜராத் 1099 பேர், ராஜஸ்தான் 1,229 பேர், டெல்லி 1,707 பேர், ஹரியானா 225 பேர், சண்டிகர் 21 பேர், மிசோரம் மற்றும் மணிப்பூரில் 3 பேர், திரிபுராவில் 2 பேர், அசாம் மற்றும் மேகாலயாவில் 44 பேர், இமாச்சல பிரதேசம் 36 பேர், பஞ்சாப் 202 பேர், ஜம்முகாஷ்மீர் 328 பேர், அருணாச்சல பிரதேசம் 1, உத்தரகண்ட் 40 பேர், உத்திரபிரதேசம் 849 பேர், லடாக் பகுதியில் 18 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் கொரோனாவால் பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 14,378 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து 1,992 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 480 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

author avatar
Jayachandiran