கொரோனா பாதித்த இந்திய மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தொடரும் கோர சம்பவங்கள்!

0
94

கொரோனா பாதித்த இந்திய மருத்துவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! தொடரும் கோர சம்பவங்கள்!

இந்தியாவில் முதல்முறையாக கொரோனா தொற்றுக்கு மருத்துவர் ஒருவர் பலியாகி உள்ளார். இச்சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் கோரதாண்டவம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. சீனாவில் உருவான கொரோனா என்னும் வைரஸ் தொற்று கிருமி உலக நாடுகளுக்கு பரவி பலாயிரம் உயிர்களை பலிவாங்கியுள்ளது. உலகளவில் இதுவரை 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதித்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் 5 ஆயிரத்து 734 பேர் இந்த பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 166 பேர் உயிரழந்துள்ள நிலையில், 473 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் 1,135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா தொற்றால் 72 பேர் இறந்துள்ளனர். 117 நபர்கள் கொரோனா வைரஸில் இருந்து குணமாகியுள்ளனர். அதிக நோயாளர்களுடன் மகாரஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.

கொரோனா பாதிப்பில் தமிழ்நாடு 2 வது இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த மருத்துவர் சத்ருகன் புன்ஞ்வானி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தொடர்ந்து தீவிர மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால் இந்தூர் நகர் பகுதியில் மட்டும் உயிரிழப்பு 22 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Jayachandiran