நோய் தொற்று அறிகுறி இல்லாமலே கொரோனா பரவுகிறது! – எடப்பாடி எச்சரிக்கை

0
77

நோய் தொற்று அறிகுறி இல்லாமலே கொரோனா பரவுகிறது! – எடப்பாடி எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் பரவி வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இரண்டாவது முறையாக ஒவ்வொரு மாவட்டத்தின் நிலவரம் என்ன என்பதை அனைத்து கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். மேலும் இதனைப்பற்றி செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது ;

தமிழக மாவட்ட ஆட்சியாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 கொரோனா ஆய்வகங்கள் விரைவில் செயல்படத் தொடங்கும் என்று கூறினார். 4,612 பேருக்கு கொரோனா கொரோனா ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும், இதுவரை தமிழகத்தில் 571 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. புதிய நோயாளிகளின் சிகிச்சைக்காக 22 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நோய் தொற்று இல்லாமலே கொரோனா பரவுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்தவித அறிகுறி இல்லாமலேயே கொரோனா பரவி வருவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

டெல்லி நிஜாமுதீன் மாநாட்டிற்கு சென்ற நபர்கள் தாமாகவே முன்வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டனர். வீட்டு கண்காணிப்பில் உள்ள நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசியமான பொருட்கள் தரப்படுகிறது. குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா நிவாரணம் நிதி ரூ.1,000 வழங்கப்படும். தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு 500 கோடி கொடுத்துள்ளது. ஊரடங்கு முடிந்த பிறகே பள்ளி தேர்வுகள் குறித்த முடிவு எடுக்கப்படும்.

கொரோனா நோயார்களின் சிகிச்சைக்காக புதியதாக 2,500 வெண்டிலேட்டர்கள் வாங்க கொள்முதல் ஆணை கொடுக்கப்பட்டு உள்ளது. ரேபிட் டெஸ்ட் கருவி, உபகரணங்கள் என் 95 முக கவசங்கள் போதுமானவை கையிருப்பில் உள்ளன. ஏற்கனவே ஆர்டர் கொடுக்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் வருகின்ற 9 ஆம் தேதி வரும், அடுத்த நாளே மக்களுக்கு இதன் மூலம் சோதனை நடத்தப்படும். மக்களை துன்புறுத்தாமல் கொரோனா தடுப்பு பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் தமிழக மக்கள் கண்காணிப்பு பணியில் இருக்கும் காவலர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கூறினார்.

author avatar
Jayachandiran