கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு

0
83

கொரோனா தடுப்பு: காவல்துறைக்கு 75 கோடி ஒதுக்கீடு! – தமிழக அரசு அறிவிப்பு

உலகளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனாவால் இந்தியாவில்
3,000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியாவில் கொரோனாவால் 70 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒவ்வொரு மாநிலத்திலும் தினசரி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் தொடர்ந்து வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் உத்தரவை மீறி வெளியே வருபவர்களை மக்களின் பாதுகாப்பு கருதி மீண்டும் வீட்டிற்கு திருப்பி அனுப்புவது, நூதன தண்டனை தருவது கொரோனாவை மேலும் பரவவிடாமல் தடுக்கும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறைக்கு ரூ.75 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தவிட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக தமிழக காவல்துறைக்கு 33 நாட்களுக்கு தலா ரூ.250 உணவுப்படியாக மொத்தமாக ரூ.8250 வழங்கப்பட உள்ளது. மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் தற்காலிகமான தனிமைபடுத்தும் வார்ட்டுகள் தயாரிக்க ரூ.22.57 கோடியை ஒதுக்குவதாகவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
Jayachandiran