தனியார் பள்ளிகள் 40% கல்விக் கட்டணம் வசூலிக்கலாம்! உயர்நீதிமன்றம் உத்தரவு

0
59

மாணவர்களின் கல்விக் கட்டணம் குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இடைக்கால உத்தரவில் கூறியதாவது; கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைவரும் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளனர். பள்ளிகளின் அனைத்து கோரிக்கைகள் குறித்தும் நீதிமன்றம் உடனே உத்தரவு பிறப்பிக்க இயலாது.

மேலும் அதிகளவில் பெற்றோர்கள் வருமானம் இல்லாமல் தவிக்கின்றனர். கொரோனாவை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கை எடுத்து வந்தாலும் தினசரி நாளுக்கு நாள் புதிய சவால்களை அரசு எதிர்கொண்டு வருகிறது. மேலும் இதனுடைய தாக்கம் எப்போதும் குறையும் என்பது தெரியாத நிலையில் உள்ளது.

மாணவர்களின் கல்வி பாதிக்ககூடாது என்பதில் அனைவரின் கவனமும் உள்ளது. பள்ளிகளுக்கான கட்டணத்தில் 75% கட்டணத்தை வசூலிக்கலாம் என்று அரசு முடிவெடுத்துள்ளது. இரண்டாம் தவணையாக 25% கட்டணத்தை பள்ளிகள் திறக்கும் போது வசூலிக்கலாம் என கூறும் நிலையில், எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளது. ஆகவே 2020-21 ஆண்டில் முதல் தவணையாக 40% கட்டணம் மட்டுமே வசூலிக்கலாம் என்று கூறினர்.

இந்த உத்தரவு அரசு உதவிபெறாத கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். பாடப் புத்தகங்களை இலவசமாக அல்லது குறைந்த விலையில் வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்க வேண்டும்’ என்று கூறிய நீதிபதி இந்த வழக்கை அக்டோபர் மாதம் 5 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

author avatar
Jayachandiran