இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை மக்களுக்கு வழங்க வேண்டும்; -முதல்வருக்கு ஸ்டாலின் அறிக்கை

0
129

முதல்வருக்கு இதயத்தில் ஈரம் இருந்தால் மின்கட்டண சலுகைகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு; கூடுதல் மின் கட்டணம் வசூலிக்கும் உத்தரவை அதிமுக அரசு உயர்நீதிமன்றத்தில் நியாயப்படுத்தி இருப்பது பொறுப்பில்லாத செயல் என்று கூறியுள்ளார். பேரிடர்களை காரணம் காட்டி டெண்டர் விதிகளை மீறும்போது மின்கட்டண சலுகை மட்டும் அளிக்க முடியாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மின் கட்டண உயர்வை பற்றி தமிழக முதல்வரோ, மின்சாரத்துறை அமைச்சரோ இதுவரை புரிந்துகொள்ளாமல் இருப்பது வேதனையான விசயமாகும். நுகர்வோர்தான் அதிக மின்சாரத்தை பயன்படுத்துவதாக கூறி அமைச்சரும், அரசும் மக்களை ஏமாற்றுகின்றனர். மின்சார சட்ட விதிகளை உயர்நீதிமன்றத்தில் காட்டி அதிகமான கட்டண வசூலிப்பை அதிமுக அரசு நியாயப்படுத்தி வருகிறது.

முந்தைய மாதத்தில் மின் நுகர்வோர் கட்டிய மின்கட்டணத்திற்கான யூனிட்களை கழித்து மின் கட்டணத்தை கணக்கிட வேண்டும். இதனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களும் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே மின் கட்டணத்திற்கு மானியம் மற்றும் நீண்டகால தவணை முறையில் மின்கட்டணம் செலுத்த வழிவகை செய்ய வேண்டும்.

ஊரடங்கு காலத்தில் 31.07.2020 வரையிலான முறையை கேரள அரசு அறிவித்தது போல் பயன்பாட்டிற்கான 70% மின்கட்டணத்தை செலுத்தினாலே போதும் என்று அறிவிக்க வேண்டும். அரசு காட்டும் மின்சார சட்ட விதிகளின்படியே கொரோனா பேரிடரை ஒரு சிறப்பு நேர்வாக கருதி மின் கட்டணத்தை குறைக்கலாம். இதையெல்லாம் இதயத்தில் ஈரம் இருந்தால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்யலாம்’ என்று ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

author avatar
Jayachandiran