மூன்றாவது இடத்தில் இந்தியா.!:அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால் தொற்று எண்ணிக்கை உயர்வு

0
52

உலக நாடுகளில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் பல லட்சம்பேர் தினசரி பாதித்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் மிக தீவிரமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நேற்று மூன்றாவது நாளாக தொடர்ந்து 20 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தீயாக பரவும் வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் நோயாளர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்து 850 ஐ தொட்டது. குறிப்பாக மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, கர்நாடகா, தெலுங்கானா, அசாம், பீகார் போன்ற 7 மாநிலங்களில் மட்டும் 78 சதவீத தொற்று பாதிப்பை கொண்டுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 7 ஆயிரத்திற்கும் மேலான தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. ஒட்டுமொத்தமாக அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 73 ஆயிரத்து 165 ஆக உயர்ந்துள்ளது.

இதன் மூலமாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஆப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கொரோனா மைய தரவின்படி, ரஷ்யாவை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தில் இந்தியா முன்னேறியுள்ளது. முதல் இடத்தில் அமெரிக்காவும், இரண்டாவது இடத்தில் பிரேசிலும் இருந்து வருகின்றன.

author avatar
Jayachandiran