தமிழகம் முழுவதும் நாளை பொது ஊரடங்கு; குறிப்பிட்ட இதற்கு மட்டும் அனுமதி உண்டு!

0
111

கொரோனா தொற்று பாதிப்பின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு முறையானது வரும் திங்கள் முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்காக மாற இருக்கிறது.

அவசரகால மருந்தகங்கள் மற்றும் அத்தியாவசிய தேவைக்கான கடைகள் மட்டுமே இயங்கும் என முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் பொது ஊரடங்கு கடைபிடிக்க உத்தரவு போடப்பட்டுள்ளது. நாளை எந்த கடைகளும் திறக்கப்படாது. பேருந்துகளும் இயங்காது. மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு தடைகளை மீறி வெளியே சுற்றினாலோ, அல்லது வாகனங்களில் பயணித்தாலோ அவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு தனிமைபடுத்தப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

author avatar
Jayachandiran